சின்ட்ரெல்லாவின் ஒற்றை செருப்பும், இளவரசனின் ரெட்டை சோகமும்!!!


Picture Courtesy: http://www.drawingboard.org

கிண்டியில் இருந்து அண்ணா பல்கலை செல்ல‌
21G ல் கடைசி படிக்கட்டில்
ஒற்றை காலில் தொங்கியபடி
வியர்வையில் நனைத்தபடி
வாழ்வை நொந்தபடி நான்
காற்றில் சிக்கிய என் கேசமும்
எதைஎதையோ நினைத்தபடி என் மனமும்
மிரட்சியில் விழிகளும் அலைபாய்ந்தன‌
படிக்கட்டு ஓர சன்னல் இருக்கையை
கண்கள் கண நேரம் கடந்தது
நிறுத்தம் வரும் வரையிலும்
அங்கேயே நிலைக்குத்தி நின்றது
அம்மா சுடும் தோசை போல் வட்ட முகம்
ரோஜாவின் இதழை இதழாய்
இதயத்தை இன்றளவும் குத்தும் கூரிய நாசி
மையலில் வீழ்த்தும் மையிட்ட விழிகள்
அவளை பார்த்த அந்த நொடி
ஐஸ்வர்யா ராயும் அழகு குறைந்தவளானாள்
மகிழ்ச்சி: அவளை கண்ணீமைக்காமல் பார்த்தது
சோகம் : அவள் ஒரு கணம் கூட எனை பார்க்காதது
அன்றிலிருந்து எப்பொழுதெலாம் 21G யை
பார்த்தாலும் அப்பொழுதெலாம்
சின்ட்ரெல்லாவின் ஒற்றை செருப்பை பார்க்கும்
இளவரசனின் ரெட்டை சோகத்தில் நான்...

My Name is Khan

நான் இதுவரை கேள்விப்படாத ஒரு நோய்... Asperger syndrome..
மன்னிக்கவும் அது நோய் அல்ல ஒரு குறைபாடு. Its not a disease its a disorder.இக்குறைபாடுள்ள மனிதராக ஷாரூக் நடித்துள்ள படம் தான் My Name is Khan.
நீண்ட எதிர்பார்பிற்கு பிறகு (சுமார் 7 வருடங்களுக்கு பிறகு)ஷாரூக் காஜோல் இணைந்து நடித்த படம் கரன் ஜோஹர் படம். படத்தில் காதல் காட்சிகள் குறைவே. ஆனால் இருக்கும் சில காட்சிகளும் நிறைவே. (Made for each other in screen)

ஷாரூக் அமெரிக்க அதிபரை பார்க்கப் போகும் அந்த இரண்டாவது பாதி அருமை.
ஒரு கிறித்துவ சபை ஆப்பிரிக்க நாடொன்றுக்கு நிதி திரட்டுகிறது. அத்றகு நிதி உதவி அளிக்கிறார் ஷாரூக் அப்போது அந்த பெண்மணி இது கிறித்துவர்களுக்கான் சபை என்கிறார் அதற்கு ஷாரூக் அந்த‌ பணத்தை அங்கு வாழும் கிறித்துவர் அல்லாதவர்க்கு கொடுக்க சொல்கிறார்...

நீங்கள் நன்றாக பாருங்கள் அந்த காட்சி மறைமுகமாக நிறைய சொல்வதை உணர்வீர்கள்.

புயலால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவது...

Repair almost Everything....

Garlic Tea...

என்று இந்த படத்தில் ரசிப்பதற்கு, உண்ர்வதற்கு நிறையவே இருக்கிறது..

ஹோங்கே காமியாப்
ஹோங்கே காமியாப்
ஹம் ஹோங்கே காமியாப் ஏக் தின்....
மன்மே ஹே விஸ்வாஸ்
பூரா ஹே விஸ்வாஸ்
ஹம் ஹோங்கே காமியாப் ஏக் தின்....

இப்பொழுது நான் முணுமுணுத்துக் கொண்டிருக்கும் பாடல்.... நீங்களும் முணுமுணுப்பீர்கள் படம் பார்த்த பிறகு...

ஆடு பாம்பே !!!!

‘உளியிட்ட கற்சிலையில் உண்டோ உணர்ச்சி ?

உலகத்தில் மூடர்களுக்குண்டோ உயர்ச்சி ?

புலியிட்ட செம்பினில் குற்றம்போமோ

அஞ்ஞானம் போகாது மூடருக்கென்று ஆடு பாம்பே ‘

பூசை செய்ததாலே சுத்த போதம் வருமோ ?

பூமி வலம் செய்ததனால் புண்ணியம் உண்டோ

ஆசையற்ற காலத்திலே ஆதிவத்துவை

அடையலாம் என்று துணிந்தாடு பாம்பே

தன்னை அறிந்து ஒழுகுவோர் தன்னை மறைப்பார்

தன்னையறியாதவரே தன்னைக் காட்டுவார்

பின்னையொரு கடவுளை பேண நினையார்

பேரொளியைக் காணுவர், என்றாடு பாம்பே ‘ ‘

நேற்று முன்தினம் ரத்தக்கண்ணீர் படம் பார்த்தேன். அதன் முடிவில் வரும் இந்த பாம்பாட்டி சித்தரின் பாடல் எனக்குள் எதையோ துவக்குவதை உணர்கிறேன்..

மூன்றடி திருக்குறள்வானத்தையும் தாண்டி
எனக்கான விடியலைத் தேடி
கனவுகள் பெரிது ஆயினும்
அடைந்திடும் உறுதியும் பெரிது
என் லட்சியத்தின் குறுக்கே வரும்
இதமான இம்சை நீ
உன் இச்சை கடந்தால் மட்டுமே
லட்சியம் கைக்கெட்டும் நிலையில் நான்
சூரியனை பிடிக்க பறந்த்திடும் பறவை நீ
வானத்தின் எல்லை தேடும் முட்டாள் நான்.
மூன்றடி திருக்குறள் நாம்
சாத்தியமில்லா பொருத்தமுள்ள‌ ஜோடி நாம்.

பசுமை நிறைந்த நினைவுகளே...

இந்த படத்தை டவுன்லோட் பண்ணி ரொம்ப நாளாச்சு. நேத்து கெடச்ச கொஞ்ச கேப் ல பார்த்தேன்.

அசந்துட்டேன்!!! எனது Engineering கால வாழக்கையை ஓரளவு கண்முன் கொண்டு வந்தது. படம் முடிந்து இரவு கண் மூடி தூங்க நினைத்தால் கண்ணுக்குள் என் கல்லூரி கால நினைவுகள். பசுமையான அந்த நினைவுகள் என் இரவை இனிமையக்கி விடியலை வேகமாய் வர செய்து விட்டது....

ஹிரானிக்கு எனது நன்றிகள்....என்னை ஆச்சர்யபடுத்தும் மனிதர்களில் அமீர்கானும் ஒருவர். எப்படி அமீர் நல்ல கதைகள் உங்களை தேடி வருகின்றன?...

படத்தின் துவக்கத்தில் வரும் பாடலை இறுதி வரை இசைக்க விட்டிருப்பது அருமை. நெருடல் இல்லாத இதமான இசை படம் முழுதும்.

படத்தில் வரும் கல்லூரி மாணவர்கள் அத்தனை பேரின் சாயல் கொண்ட
கேரக்டர்கள் ஒவ்வொரு கல்லூரியிலும் ஒவ்வொரு பேட்சிலும் உண்டு. ஆம் எனது பேட்சிலும் உண்டு... அத‌ ஒரு தொடர் பதிவா போட உத்தேசம்... (இனிமே இவன் blog பக்கமே வரக்கூடாதுடா சாமினு நீங்க முணுமுணுக்கறது கேட்குது.. ஆனாலும் விடமாட்டேன்...)

படத்தில் ஆங்காங்கே சிறுசிறு குறைகள் இருப்பினும் அது பாற்கடலில் விழுந்த ஒரிரு நீர்துளிகள்....

கண்டிப்பாய் பார்க்க வேண்டிய படம்.... வேலை முறைப்பதால் விமர்சனம் இத்துடன் முற்றுகிறது...

ALL IS WELL


கூடுதல் தகவல்: (விக்கிபீடியாவில் இருந்து சுட்டது)

.It is expected to be the first Indian film to be officially released on YouTube, within 12 weeks of releasing in theatres.
.The film also uses real inventions by little known people in India's backyards.
.The brains behind the innovations were Remya Jose, a student from Kerala, who created the exercise-bicycle-cum-washing-machine.
.Mohammad Idris, a barber from Meerut district in Uttar Pradesh, who invented a bicycle-powered horse clipper.
.Jahangir Painter, a painter from Maharashtra, who made the scooter-powered flour mill.

எங்கடா அவன்.. கையில கிடச்சான்னா அவ்ளோதான்...


நான் என்னோட வேலையில ரொம்ப பிஸி (?) அதனால சமீப காலமா தமிழ் படங்கள் பார்க்க முடியறது இல்ல. ரெண்டு நாளைக்கு முன்னாடி பெங்களூர் ல இருந்து ஒரு நண்பன் போன் பண்ணினான் "டேய் மச்சான்! ஒரு படம் வந்துருக்கு டா. செம சூப்பர் மச்சி. ஹாலிவுட் டச் ல இருக்கு. உனக்கு வேற அமரர் கல்கி னா பிடிக்குமே அவரோட புதினங்கள் பார்த்திபன் கனவு, பொன்னியின் செல்வன் பேஸ் பண்ணின படம் தவறாம பாரு " அப்படினு சொன்னான். (நான் அவ‌னுக்கு எந்த‌ கெடுத‌லுமே ப‌ண்ணின‌து இல்ல‌யே.. :-( )

சரி நண்பன் சொல்றானேனு நானும் எனது இடையறாத பணிகளுக்கு நடுவே டாரண்ட் உதவியால தரவிறக்கம் செய்து பார்த்தேன்.

மண்ணாங்கட்டி... கல்கியோட புதினங்களுக்கும் அந்த படத்துக்கும் ஒரு வரி கூட சம்பந்தத்தைக் காணோம். என்ன ஆச்சு செல்வ ராகவனுக்கு. நல்லா தான போய்கிட்டு இருந்துச்சு.


டைரகடர் நல்லா குழப்பி போயிருகார்னு தெளிவா தெரியுது. நல்ல கதையில இலங்கை பிரச்சனையை நுழைக்க முயற்சித்த‌து முழு படத்தையும் நசமாக்கிருச்சு. 2 நிமிடம் வேக வைக்க வேண்டிய நூடுல்ஸ 20 நிமிசம் வேக வைச்சா என்ன ஆகுமோ அப்படி ஆகியிருக்கு கதை.

அதுக்காக படம் முழுசும் வேஸ்ட்னு சொல்ல முடியாது. ஆங்காங்கே சில விசயங்கள் ரசிக்கும் படியா இருக்கு. படத்தில் ரெண்டு ஆறுதல் ஒண்ணு பார்த்திபன். தனக்கு கொடுத்த காசுக்கு மேலேயே மெனக்கெட்டு இருக்காரு ஆனா என்ன பண்றது விழலில் இறைத்த நீர். இன்னொரு ஆறுதல் ரீமா சென். ரீமா உங்களுக்கு நல்லா நடிக்கவும் வருது. மத்தபடி கேரகடர் செலக்ட் பண்றதிலேயே ராகவன் சறுக்கிட்டார்.

அந்த ராணுவ மேஜர் (அதாங்க கற்றது தமிழ் ல வர ஸ்கூல் வாத்தி) பார்க்க சரத் பொன்சேகா மாதிரியே இருக்காருங்கறதுக்காக அவரயா செலக்ட் பண்றது? சுத்தமா ஒட்டவே இல்ல.

மொத்த‌த்துல‌ க‌தையே ம‌னசுல‌ ஒட்ட‌ல‌... ஒரு ந‌ம்பிக்கைகுரிய‌ விச‌ய‌ம் என்ன‌னா ரெண்டாம் பாக‌ம் எடுக்க‌ போறாங்க‌ளாம்... ஹ்ம்ம்.. அதுல‌யாவ‌து த‌வ‌றுக‌ளை ச‌ரி செய்வீங்க‌ளா செல்வா?.........

இந்த பதிவோட தலைப்பு, என்னய அந்த படத்த பார்க்க சொன்ன அந்த பிரியமான நண்பன பற்றி மற்றவர்களிடம் விசாரிக்கும் வாசகம்..

இரயில் பெண்!அன்றொரு நாள்
கோவை விரைவுத் தொடர்வண்டியில்
எப்போதும் வாயிலின் படியில்
அமர்ந்து பயணிக்கும் நான்
அன்று பெட்டியின் நடுவில்
அவளின் விழியீர்ப்பு மையத்தில்
பிரம்மனும் தோற்றிடும் படைப்பு
பார்க்கும் பொழுதெல்லாம் செல்லரிப்பு
அவள் நாலைந்து முறை தவறுதலாக‌
சில் மைக்ரோ விநாடிகள் எனைப் பார்த்தாள்
நான் ஒரு nano விநாடியும்
தவறாமல் அவளைப் பார்த்திருந்தேன்
அது மானைப் பார்க்கும் புலியின் பார்வையல்ல‌
ஒரு பூவைப் பார்க்கும் பட்டாம்பூச்சியின் பார்வை
ஏழு மணிநேரம் கழிந்தது
நானிறங்க வேண்டிய நிறுத்தமும் வந்தது
என்னை இறக்கி விட்டு விட்டு
கேலியாய் சங்கூதிச் சென்றது ரயில்
அவளோடு என் இத‌யத்தையும் சுமந்து......

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருத்தால் கீழே ஓட்டளித்து செல்லுங்கள்...