மத்திய பாரத பயணம் !!!


          
செப்டம்பர் 27 முதல் நவம்பர் 4 வரை Phase-II Training மத்திய பிரதேசத்து ஜபல்பூரில் அளிக்கப்பட்டது. மத்திய இந்தியாவின் ராணுவ பயிற்சி மற்றும் தலைமையகம் அமைந்துள்ள அதே வளாகத்தில் தான்....

          மத்திய பிரதேசம் இயற்கை அன்னையின் அன்பையும் அரவணைப்பையும் முழுதும் பெற்ற மாநிலம். ஒவ்வொரு வாரமும் ஏதேனும் ஒரு சுற்றுலா அல்லது இயற்கை பிரதேசங்களுக்கு சென்றோம். அங்கு நான் அனுபவித்ததை, ரசித்ததை இனி பகிரப் போகிறேன்.

           Training ன் முதல் வார சனிக்கிழமை மகாத்மா காந்தி பிறந்ததனால் விடுமுறையாக அமைந்தது. வெள்ளியன்று இரவே ஒரு Tavera வில் நாங்கள் பத்து பேர் சித்திரக்கூடம், மற்றும் கஜூராஹோ நோக்கி கிளம்பினோம்.



          அதிகாலை 4:30 மணிக்கு சித்திரக்கூடம் அடைந்தோம். கிடைத்த ஒரு தர்மசாலையில் 3 மணிநேரத்தை தூங்கி கழித்தோம். 8:30 மணியளவில் காலை குளியல் மந்தாகினி ஆற்றில்.....





**************************************************************************************
முணுமுணுப்பது:

          இந்த பயணங்களின் போது வாகனத்தில் இசைத்த என்னை அசைத்த பாடல்ளில் ஒன்று கீழே!!


**************************************************************************************


அடுத்து வருவது! கஜூரஹோ பயணம்... (புகைப்படங்களுடன்)


*************************************************************************************

காற்றும் என் காதலும்!!

கண்ணால் காண முடியாததால்
காற்று இல்லை என்பதில்லை
நான் சொல்லாததால்
எனக்குள் இல்லை என்றில்லை!!!

எண்களின் துவக்கம் 0 அல்ல 1 லிருந்து !!!!




          ராஜ்கோட்டுக்கு திரும்பி ஒரு வாரம் ஆகிறது. ஊருக்கு போன வேலையெல்லாம் சுபமாய் முடிந்தது. (வளைகாப்பு, தமிழ் செம்மொழி மாநாடு, நண்பர்களுடனான சந்திப்பு..... ) சரி! ஊரில் நடந்தவற்றை அடுத்த பதிவில் பார்போம். இப்ப மேட்டருக்கு வருவோம். நேற்று முன்தினத்திற்கு நேற்று, தூக்கம் வராத இரவில் கால்குலேட்டரை வைத்து விளையாடிக் கொண்டு இருந்தேன் அப்போது ஒரு வினோதமான ஒன்றை கவனித்தேன்.

          எந்த ஒரு எண்ணையும் 8 முறை தொடர்ந்து வர்கமூலம் (Square root) காணும் பொழுது அது 1.0 ஆகிறது. எடுத்துக்காட்டு

Number : 256

√256 = 16
√16=4
√4=2
√2=1.414
√1.414 = 1.189
√1.189 = 1.0905
√1.0905 = 1.044
√1.044 = 1.02

Number : 12345678

√12345678 = 3513.641
√3513.641 = 59.275
√59.725 = 7.69908
√7.69908 = 2.774
√2.774 = 1.665
√1.665 = 1.290
√1.2906 = 1.13
√1.13 = 1.06

          இதிலிருந்து நான் அறிந்து கொண்டது என்னவெனில் எண்களின் துவக்கம் பூஜ்ஜியம் அல்ல 1 தான். பூஜ்ஜியம் என்பது வெறும் குறியீடு மட்டுமே. (அதெல்லாம் எங்களுக்கு முன்னவே தெரியும் என்பவர்களுக்கு மேலும் ஒரு விசயம் எண்களின் துவக்கம் 1 ஆதலால் 0.5, 0.75 போன்ற மதிப்புகளும் கிடையாது எல்லாம் 1 லிருந்து தான்...... ) புரிந்தவர்கள் திட்டலாம் புரியாதவர்கள் பின்னூட்டமிடலாம்......

          அனைத்தின் மூலமும் 1 தான்.......... (டபுள் மீனிங்)

**************************************************************************************

முணுமுணுப்பது:

           காதல் வந்தாலே காலு ரெண்டும் தன்னாலே காத்தா சுத்துதே உந்தன் பின்னாலே.... (ஊருல இந்திரா கொட்டாய்ல பார்த்தேன். அய்யோ! அனுஷ்கா எவ்ளோ அழகு!!!!! )

**************************************************************************************

உஷார்! உஷார் !



          இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் வரும் 17 ம் தேதி எனது அண்ணி அவர்களின் வளைகாப்பு.
          அதை முன்னிட்டு மதிப்பிற்குரிய மாயாவி அவர்கள் (யாருப்பா அங்க சிரிக்கறது?....) ஊருக்கு கிளம்புகிறார். ஜூலை 4 ம் தேதி தான் ராஜ்கோட் திரும்புவார்.
*************************************************************************************

அறிந்து கொள்ள: (இது என்னோடதல்ல....)

List of 64 arts /அறுபத்துநாலு கலைகள்



          அறுபத்துநாலுகலைகளின் பட்டியலை மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் தொகுத்த செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி (A Comprehensive Etymological Dictionary of the Tamil Language )Vol. 1 , Part - 1 பக்கம் 545-548 வரையிலும் கண்டுள்ளபடி இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது.. தெரிந்துகொள்ளுங்கள்.

          அறுபத்துநாலுகலை (பெ.) `காமசூத்திரம்' என்னும் பழைய சமற்கிருத நூலிற் சொல்லப்பட்டுள்ள அறுபத்துநான்கு கலைகளும் அறிவியல்களும்.

அறுபத்து நாலு கலைகளாவன:

1. எழுத்திலக்கணம் (அக்கரவிலக்கணம்);
2. எழுத்தாற்றல் (லிகிதம்);
3. கணிதம்;
4. மறைநூல் (வேதம்);
5. தொன்மம் (புராணம்);
6. இலக்கணம் (வியாகரணம்);
7. நயனூல் (நீதி சாத்திரம்);
8. கணியம் (சோதிட சாத்திரம்);
9. அறநூல் (தரும சாத்திரம்);
10. ஓகநூல் (யோக சாத்திரம்);
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்);
12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்);
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்);
14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்);
15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்);
16. மறவனப்பு (இதிகாசம்);
17. வனப்பு;
18. அணிநூல் (அலங்காரம்);
19. மதுரமொழிவு (மதுரபாடணம்);
20. நாடகம்;
21. நடம்;
22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்);
23. யாழ் (வீணை);
24. குழல்;
25. மதங்கம் (மிருதங்கம்);
26. தாளம்;
27. விற்பயிற்சி (அத்திரவித்தை);
28. பொன் நோட்டம் (கனக பரீட்சை);
29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை);
30. யானையேற்றம் (கச பரீட்சை);
31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை);
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை);
33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை);
34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்);
35. மல்லம் (மல்ல யுத்தம்);
36. கவர்ச்சி (ஆகருடணம்);
37. ஓட்டுகை (உச்சாடணம்);
38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்);
39. காமநூல் (மதன சாத்திரம்);
40. மயக்குநூல் (மோகனம்);
41. வசியம் (வசீகரணம்);
42. இதளியம் (ரசவாதம்);
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்);
44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்);
45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்);
46. நாடிப்பயிற்சி (தாது வாதம்);
47. கலுழம் (காருடம்);
48. இழப்பறிகை (நட்டம்);
49. மறைத்ததையறிதல் (முஷ்டி);
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்);
51. வான்செலவு (ஆகாய கமனம்);
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்);
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்);
54. மாயச்செய்கை (இந்திரசாலம்);
55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்);
56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்);
57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்);
58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்);
59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்);
60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்);
61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்);
62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்);
63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்);
64 சூனியம் (அவத்தைப் பிரயோகம்).

வேறொரு பட்டியல்

1. பாட்டு (கீதம்);
2. இன்னியம் (வாத்தியம்);
3. நடம் (நிருத்தம்);
4. ஓவியம்;
5. இலைப்பொட்டுக் (பத்திர திலகம்) கத்தரிக்கை;
6. பல்வகை யரிசி பூக்களாற் கோலம் வைத்தல்;
7. பூவமளியமைக்கை;
8. ஆடையுடை பற்களுக்கு வண்ணமமைக்கை;
9. பள்ளியறையிலும் குடிப்பறையிலும் மணி பதிக்கை;
10. படுக்கையமைக்கை;
11. நீரலை அல்லது நீர்க்கிண்ண இசை (ஜலதரங்கம்);
12. நீர்வாரி யடிக்கை;
13. உள்வரி (வேடங்கொள்கை);
14. மாலைதொடுக்கை;
15. மாலை முதலியன் அணிகை;
16. ஆடையணிகளாற் சுவடிக்கை;
17. சங்கு முதலியவற்றாற் காதணியமக்கை;
18. விரை கூட்டுகை;
19. அணிகலன் புனைகை;
20. மாயச்செய்கை (இந்திரசாலம்);
21. குசுமாரரின் காமநூல் நெறி (கௌசுமாரம்);
22.கைவிரைவு (ஹஸ்தலாவகம்);
23. மடைநூலறிவு (பாகசாத்திர வுணர்ச்சி);
24. தையல்வேலை;
25. நூல்கொண்டு காட்டும் வேடிக்கை;
26. வீணை யுடுக்கைப் பயிற்சி (வீணை டமருகப் பயிற்சி);
27. விடுகதை (பிரேளிகை);
28. ஈற்றெழுத்துப் பாப் பாடுகை;
29. நெருட்டுச் சொற்றொடரமக்கை;
30. சுவைத்தோன்றப் பண்ணுடன் வசிக்கை;
31. நாடகம் உரைநடை (வசனம்) யிவற்றினுணர்ச்சி;
32. குறித்தபடி பாடுகை (ஸமஸ்யாபூரணம்);
33. பிரம்பு முத்தலியவற்றாற் கட்டில் பின்னுதல்;
34. கதிரில் நூல் சுற்றுகை;
35. மரவேலை;
36. மனைநூல் (வாஸ்து வித்தை);
37. காசு, மணி நோட்டம் (நாணய ரத்னங்களின் பரிசோதனை);
38. நாடிப்பயிற்சி (தாதுவாதம்);
39. மணிக்கு நிறமமைக்கையும் மணியின் பிறப்பிட மறிகையும்;
40. தோட்டவேலை;
41. தகர்ப்போர் சேவற்போர் முதலிய விலங்கு பறவைப்போர்;
42. கிளி நாகணங்கட்குப் பேச்சுப் பயிற்றுவகை;
43. உடம்பு பிடிக்கையும் எண்ணைய் தேய்க்கையும்;
44. குழூவுக்குறி (சங்கேதாக்ஷரங்களமத்துப் பேசுகை);
45. மருமமொழி (ரகசிய பாஷை);
46. நாட்டுமொழி யறிவு (தெசபாஷை யுணர்ச்சி);
47. பூத்தேர் (புஷ்பரதம்) அமக்கை;
48. முற்குறி (நிமித்தம்) அமைக்கை;
49. பொறியமைக்கை;
50. ஒருகாலிற் கொள்கை (ஏகசந்தக்கிராகித்வம்);
51. இருகாலிற் கொள்கை (துவிசந்தக்கிராகித்வம்);
52. பிதிர்ப்பா (கவி) விடுக்கை;
53. வனப்பு (காவியம்) இயற்றுகை;
54. உரிச்சொல்லறிவு (நிகண்டுணர்ச்சி);
55. யாப்பறிவு;
56. அணியறிவு (அலங்காரவுணர்ச்சி);
57. மாயக்கலை (சாலவித்தை);
58. ஆடையணியுந் திறமை (உடுத்தலிற் சாமர்த்தியம்);
59. சூதாட்டம்;
60. சொக்கட்டான்;
61. பாவை (பொம்மை), பந்து முதலியன வைத்தாடுகை;
62. யானயேற்றம், குதிரையேற்றம் பயிற்சி;
63. படக்கலப் பயிற்சி;
64. உடற் (தேகப்) பயிற்சி (சது.).

நன்றி: http://tamilelibrary.org/teli/arts.html

*************************************************************************************

சிந்திக்க:
           ஏற்ற காலம் கடந்த பின் பயணம் துவங்கும் கப்பல் புயலில் சிக்கித்தான் போகும்.
- அனுபவம்.

*************************************************************************************

உலகத்தமிழ் செம்மொழி மாநாடு!!!

பாடல்:






          இந்த பாடலில் we were warned!!!!!! என்ற வரிகள் எதற்கு காண்பிக்கப்படுகின்றன என்று யாருக்காவது தெரியுமா? () தெரிஞ்சா பின்னுட்ட்டதில சொல்லுங்கோ!!!!!!!

           தரவிறக்க வேண்டுவோர் இந்த சுட்டியை பயன்படுத்துங்கள்.


          உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டின் அதிகாரப்பூர்வ தளத்திற்கு செல்ல இங்கே சொடுக்கவும்.

********************************************************************************************
சிந்திக்க:
           அழகான ஒருத்தி தான் தனக்கு மனைவியாய் வர வேண்டுமென்று ஆணோ அல்லது அழகான ஒருவன் தான் தனக்கு கணவனாய் வர வேண்டுமென்று பெண்ணோ நினைத்தால், உலகில் 95 சதவிதத்தினர் முதிர் கண்ணன்களாவோ அல்லது முதிர்கன்னிகளாகவோ வாழ வேண்டி இருக்கும்.

                                         - நாங்களும் கருத்து சொல்வோம்ல......

********************************************************************************************

விஷ்ணுபுரம்: ஜெயமோகனுக்கு ஒரு கடிதம்!!!




மதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு!

           நான் உங்களை இதற்கு முன் வாசித்தது இல்லை. சித்தர்கள் பற்றி எப்போதும் போல அன்றும் தேடிக்கொண்டிருந்தேன். அப்போது உங்கள் ரசவாதம் பற்றிய சிறுகதைக்கு இட்டுச் சென்றது Google. அதுதான் நான் வாசித்த உங்களது முதல் எழுத்துகள். படித்தபின் நினைத்தேன் இவரை எப்படி இத்தனை நாள் தவறவிட்டேன் என்று....

          உடனே உங்களது புத்தகங்கள் இனையத்தில் எங்கு கிடைக்கும் என்று Google இடம் கேட்டேன் அது உடுமலை.காம் க்கு என்னை கூட்டிச்சென்றது.

          பார்த்தவுடன் என்னை கவர்ந்தது விஷ்ணுபுரம். 20 நாட்களுக்கு முன் உடுமலை.காம் லிருந்து விஷ்ணுபுரம் தருவித்து படிக்கத்துவங்கினேன். எனக்கு பிடித்த எழுத்துகள் என்று வரிசைப்படுத்தினால் அதில் அமரர் கல்கிக்கே முதலிடம். பல தளங்களில் ஒரே நேரத்தில் பயணிக்கும் நீங்கள் கல்கியை தண்டித்தான் போகிறீர் சிற்சில இடங்களில்.

          விஷ்ணுபுரத்தின் கதையை ஒரு 100 பக்கங்களில் அடைத்திட முடியும், ஆனால் இதில் நிறைந்திருக்கும் தத்துவ விசாரணைகளை எப்படி உங்களால் 800 பக்கங்களுக்குள் அடக்க முடிந்தது என்று நினைக்கும்போது வியப்பாய்தானிருக்கிறது.

          உண்மையை சொல்கிறேன் ஜெமோ அவர்களே ! விஷ்ணுபுரம் படிக்கத்துவங்கிய 2 ம் நாளிலிருந்து என் தூக்கம் எனக்கு வித்த்யாசமாய் பட்டது. என்னுள் பல காலமாய் சுழன்று அடிக்கும் பல கேள்விகளில் சிலவற்றிற்கு விஷ்ணுபுரம் விடைதருகிறது. பல கேள்விகளுக்கு, எரியும் நெருப்பிற்கு நெய்யாய் இருக்கிறது.

          உங்கள் விஷ்ணுபுரம் ஒரு வேள்வி. கேள்விகளை அவியாக்கினால் பதில்கள் வரமாக. ஆனால் எல்லா கேள்விகளும் விடையறுக்கபடுவதில்லை.......................


          ஸ்ரீபாதத்தில் வரும் வர்ணனைகள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு வியப்பாய் இருக்கிறது. உங்களது எழுத்துகள் அந்த கற்பனை நகரை கண்முன்னே கொணர்கிறது.

          விஷ்ணுபுரத்தின் முன்று பாகங்களும் அருமை. எனக்கு மிகவும் பிடித்தது, மீண்டும் மீண்டும் படிப்பது இரண்டாம் பாகம் கெளஸ்துபம்...

          என்னை கவர்ந்த , என்னை பாதித்த சில பகுதிகள்,

          பிங்கலனிடம் மகாபிரபு கூறுவார்,” உன்னை மீட்கும் வழி பற்றி சிந்தித்தேன் . உன்னை கூட்டிவர தாசித்தெருவிற்கு கூட வரத்திட்டமிட்டேன். ஆனால் அன்றிரவு தூக்கமற்று புரண்டு படுத்தபடி இருளுக்குள் நானும் எனது ஆத்மாவும் தனியே இருக்கும் போது அறிந்தேன்- என் மனம் ஏங்குவதை. சென்றுபோன என் இளமையை, இழந்த இன்பங்களை, இனி மீளமுடியாத அந்த உலகை...... ”இன்றைய சாமியார்கள், ஆன்மீகவாதிகளின் நிலையை நியாபகபடுத்தும் வரிகள்...

          “நாம் பார்க்கிறோம், பார்க்கும் கணத்திற்கும் அப்பொருளை பார்வை தொட்ட கணத்திற்கும் இடையே ஒரு கால இடைவெளி உள்ளது. அது மிகமிகச் சிறியதாக இருக்கலாம். ஆயினும் அவ்விடைவெளியில் அப்பொருள் அழிந்து இன்னொன்று பிறந்திருக்கும்.........”


          “புயலடிக்கும் நள்ளிரவில், மின்னலொன்று காட்டிய காடு போன்றது பிரபஞ்சக் காட்சி. அக்காட்சியை வைத்து காட்டை அனுமானிப்பதே பிழையானது. அக்காட்சி நம் கண்களை அடைந்த கணம், ஒரு நூறு மரங்கள் சரிந்திருக்கும். அடுத்த மின்னல் நமக்கு காட்டுவது வேறு காடு........ ”


          “அறிய முடியாத ஏகம் என்று வேதம் கூறுகிறதே அது என்ன ? .... அறிய முடியாத ஏகம் என்ற சொல்லே முரண்பட்டது. அறிதலில் இருந்ததல்லவா ஏகம் என்ற எண்ணம் வர முடியும்...”
அஜிதனின் இந்த பதில் எனக்குள்ளேயே என்னை கைதட்ட வைத்தது.


          “வேதங்களை கண்டறிந்த ஆதி ரிஷிகள் அவற்றை ஏன் பெருவளியிலேயே விட்டுச்செல்லவில்லை....” என்ற கேள்வியும் அதை தொடர்ந்து நிகழும் தர்க்கமும் அதில் கிடைக்கும் விடையும் சவுக்கை சுழற்றும், ஒரு உணர்வு.

          “கற்பவன் கடந்து செல்ல முடியாத நூல் எதுவுமில்லை. அது வேதங்களுக்கும் பொருந்தும்”

          “இறக்கும் உடலில் இருந்து ஆன்மா எங்கு செல்கிறது?.... விறகில் நெருப்பு எரிகிறது, விறகில்லையேல் நெருப்பு இல்லை. விறகு எரிந்து முடிந்து விட்டால் நெருப்பு முற்றிலும் அணைந்துவிடுகிறது. எவராவது விறகில் எரிந்த நெருப்பு விலகிச்சென்று விட்டது, காற்று வெளியில் அது உள்ளது என்று கூற முடியுமா?.......”

          இப்படி நிறைய இருக்கு சார்.......


          நிச்சயம் சொல்வேன் தமிழ் இலக்கியம் உள்ளவரை விஷ்ணுபுரம் இருக்கும்.

          ஒவ்வொருவரும் கண்டிப்பாக படிக்கவேண்டிய ஒன்று. இல்லை இல்லை ஒவ்வொருவரும் படித்திருக்க வேண்டிய ஒன்று....

          சிந்திக்கப்படாத ஆனால் சிந்திக்க பட வேண்டியவை நிறைய நிரம்பியது விஷ்ணுபுரம்.

          மொத்தத்தில் நிலவின் மறுபுறம் உங்கள் விஷ்ணுபுரம்.

எழுத்தாளர் ஜெமோ அவர்களின் வலைதளம் செல்ல இங்கே சொடுக்கவும்.
*************************************************************************************

சிந்திக்க :

          மனதைத் திறந்து வைத்திரு. நீ அறிந்ததைவிட பெரிய விடயம் ஒன்று இங்கு நடந்துகொண்டிருக்கிறது.

                                        - இயன்லா வன்சான்ற்.
*************************************************************************************
ரசிக்க:

          "மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம்" இது ஒரு உலகலாவிய தமிழர்கள் இணையம்வழி ஒன்றுகூடி தமிழ் இலக்கியங்களின் மின்பதிப்புக்களை உருவாக்கி அவற்றை இணையம்வழி உலகெங்கிலும் உள்ள தமிழர்களும் தமிழார்வலர்களும் இலவசமாக பெற வசதிசெய்யும் திட்டம்....
மேலும் தகவல்களுக்கும் மென்புத்தகங்களுக்கும் இங்கே செல்லவும்.
*************************************************************************************



அடுத்த பதிவு




ஜெயமோகனது விஷ்ணுபுரம் எனது பார்வையில்...

ஆஸ்கார் The Hurt Locker – விமர்சனம்:





           அப்படி என்ன தான் இந்த படத்துல இருக்குனு ஆஸ்கார் கொடுத்திருக்காங்க பார்க்கலாம்னு தரவிறக்கி பார்த்தேன். படம் REAL FEELING தரணும்னு காமிராவை தோளிலேயே வெச்சு படம் எடுத்த மாதிரி இருந்துச்சு அதனால முதல் 15 நிமிஷம் light ஆ தலைவலி ஆனா போக போக கதையுடன் ஒன்றவும் அதுதான் காரணமாவும் இருக்கு.

           எனக்கும் சின்ன வயசுல எல்லா குழ்ந்தைக்கும் இருக்குற மாதிரி ராணுவ வீரனாகனும்ன்னு ஆசை இருந்துச்சு. அந்த வயசுல மட்டும் இல்ல இப்ப இந்த படம் பார்க்குற வரைக்கும் கூட நான் ராணுவ வாழ்க்கை என்பது சாதனைகள் நிறைந்ததுன்னு தான் நினைச்சிருந்தேன். ஆனால்.....

படம் ஈராக் தலைநகர் பாக்தாத்தில்....

          மகோன்னததின் உச்சியில் இருந்த பாக்தாத் இன்று மக்கிப் போய் இருப்பதை பார்க்கும் போது ஏனோ இயல்பாகவே அமெரிக்காவின் மீதும் தீவிரவாதத்தின் மீதும் கோபம் வருகிறது.

          ஒரு சுவரின் பின் மறைந்து இருக்கும் தீவிரவாதியை (ஈராக் வாசி தீவிரவாதியா இல்ல அமெரிக்காவா.... ) கொல்ல ராணுவ வீரர்களின் அந்த நீண்ட காத்திருப்பு அடிக்கடி காஷ்மீரில் நடக்கும் சம்பவங்களை நினைவுட்டுகிறது. எவ்வளவு பொறுமை.!!!!

          Sergeant William James ஆக நடித்திருக்கும் Jeremy Renner ன் நடிப்பு அருமை.





          இது வரை எத்தனை வெடிகுண்டுகளை செயலிழக்க வைத்து இருக்கிறாய் என்று Colnel கேட்பதற்கு 873 என்று சொல்லும்போது நமக்குள்ளும் ஒரு பெருமை தொற்றிக்கொள்கிறது.

          தன்னுடன் பழகியதற்க்காக ஒரு சிறுவன் கொல்லபடுவதும் அதற்காக வருத்தப்படுவதும் அந்த கொலைக்கு பழி வாங்க துடிப்பதும் என்று தனது இயல்பான நடிப்பால் ரெண்னர் பின்னியிருக்கிறார்.

          Sergeant JT Sanborn ஆக வரும் Anthony Mackie உம சிறப்பாக செய்து இருக்கிறார். சுவரின் பின் மறைந்திருக்கும் தீவிரவாதியை கொல்ல பொறுமையாய் காத்திருப்பதாகட்டும், குண்டுகளை செயழிழக்க செய்யும் போது ரெண்னர் head set ஐ கழற்றி போட்டதற்காக அவரை அறைவதாகட்டும் ஒரு சிறந்த Sergeant நடித்திருக்கிறார்.



          பதிவு பெருசாகுதே ! நிறைய சொல்லனும்னு நினைச்சேன்.

          கடைசியா சொல்றேன்! நல்ல படம். ஆஸ்காருக்கு தகுதியான படம் தான. எல்லோரும் பாருங்க.

*****************************************************************************************

ரசிக்க:

          டாக்டர். அப்துல் கலாம் அவர்கள், நக்கீரனில் எழுதி வந்த தன்னம்பிக்கை தொடர் தரவிறக்க இங்கே சொடுக்கவும்.
*****************************************************************************************

சிந்திக்க:

          கண்ணெதிரே காணும் ஒவ்வொருவரையும் நம்புவது அபாயகரமானது. அதைக் காட்டிலும் ஒருவரையும் நம்பாதிருப்பது மிகவும் அபாயகரமானது.
                                       -அப்ரஹாம் லிங்கன்

3ஜி யும் ! ஸ்வாமிஜியும்!

         க‌ட‌ந்த‌ ப‌திவில் 3ஜி ப‌ற்றி விளக்கிவிட்டு க‌டைசி வ‌ரியில் உல‌க‌ம் அழிய‌ வாய்ப்பு இருக்குனு சொன்னாலும் சொன்னேன் சில‌‌ மெயில், நிறைய செல்பேசி அழைப்புக‌ள். எப்ப‌டி ? எப்ப‌டினு?.....


எப்ப‌டிங்குற‌துக்கு முன்னாடி......




         உலகின் முதல் 3ஜி நெட்வொர்க் 2001 ல் அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுகத்தில் அதன் தகவல் பரிமாற்ற வேகம் 348 kbps. இன்றைய தேதியில் 3ஜி தகவல் பரிமாற்ற உச்சகட்ட‌ வேகம் 21Mbps. இன்னும் 2 வருடங்களில் 50 Mbps லிருந்து 100 Mbps வரை செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

         இவ்வருட இறுதிவாக்கில் பாகிஸ்தான் மற்றூம் பங்களாதேசும் 3ஜி சேவையை அறிமுகப்படுத்தவிருக்கின்றன.

        நான் முதன்முதலில் தொலைதொடர்பு துறையில் நுழைந்தபொழுது க‌ண்ணாடி நுண்ணிழை (Optical Fiber) மற்றும் 2 Mbps Stream (PCM) என்று சொல்வோம். அதைபார்த்து வாய்பிளந்த்துண்டு. இன்று என்னடாவென்றால் வீட்டுக்கொரு Fiber (Fiber To Home - FTH)அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது. உங்களுக்கு தெரியுமா! ஒரு க‌ண்ணாடி நுண்ணிழை (Optical Fiber)ன் கொள்ளளவு இன்று வரை உறுதி செய்யப்படவில்லை. இங்கு நான் ஒரு க‌ண்ணாடி நுண்ணிழை (Optical Fiber)ல் 400 Gbps வரை செலுத்தி வருகிறேன்.



        சரி க‌ண்ணாடி நுண்ணிழை (Optical Fiber)பற்றி பிரிதொரு நாள் பார்ப்போம். இப்போது 3ஜி ஆல் உலகம் அழிய எவ்வாறு வாய்ப்புள்ளது என்று பார்ப்போம்....

        இந்த தளத்தை ஒரு பார்வை பார்த்து விடுங்கள். சுட்டி

        எங்களுக்கு தமிழ்ல சொன்னாதான் புரியும் என்பவர்கள். பிரபல பதிவுலக (சாமியார்னு சொல்லலாமா, இல்லை ஆன்மீகவாதினு சொல்லலாமா, இல்லை அகோரினு சொல்லலாமா) சரி ஏதோ ஒண்ணு. ஆனா பிரபல பதிவர். திரு.ஸ்வாமி ஓம்கார் அவர்களின் ரொம்ப பழைய ஒரு பதிவு இத படிங்க 4 பாராவை கவனிக்கவும்.

        இந்த மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி( Mobile Number Portabilty- MNP ), ஐபி டிவி ( IP TV ), மற்றும் ஜிகா போர்ட்( GE Port ) வேலைகள் நேரத்தை இறுக்குவதால் மேலதிக தகவ்லகளை இப்பதிவில் பதிவிட இயலவில்லை.Gap பார்த்து இத‌ type ப‌ண்ற‌துக்கே 3 நாள் ஆகிடுச்சு. அலைக்கற்றை ( Spectrum ) பற்றி ஒரு பதிவு ஒன்று தயார் செய்து வருகிறேன் அதில் செல்போன் கதிரியகத்தின் தீமை விளக்கப்படும். அந்த பதிவு விரைவில் வரும்.

நன்றிகள்:

        தன‌து பதிவின் சுட்டியை பயன்படுத்த அனும‌தியும் ந‌ல்ல‌ rhythemic த‌லைப்பையும் த‌ந்த‌ருளிய‌ ஸ்வாமிஜிக்கு.

ரசிக்க:

        த‌மிழின் முத‌ல் நாவ‌ல், த‌மிழின் முத‌ல் நாவ‌லா இது என்று ஆச்ச‌ர்ய‌ப‌ட‌வைக்கும் ப‌டைப்பு. ஆம்‌ மாயூர‌ம் வேத‌நாய‌க‌ம் பிள்ளை அவ‌ர்களின் பிர‌தாப‌ முத‌லியார் ச‌ரித்திர‌ம்.

சிந்திக்க:

        வெற்றி என்பது ஒவ்வொரு முறையும் முதல் இடத்தைப் பெறுவது என்று பொருள் அன்று. வெற்றி பெற்றாய் என்றால் உன் செயல்பாடு சென்ற முறையை விட இம்முறை சிறப்பாக அமைந்துள்ளது என்று பொருள்.
                                                                -பான்னி ப்ளேயர்

3ஜி ! சில சந்தேகங்களும் விளக்கங்களும்!




     சமீப காலமாக என்னை அழைக்கும் பெரும்பாலன நண்பர்கள் கேட்பது 3G பற்றி தான். அதிலும் கடந்த ஒரு வாரம் அவர்கள் வினவுவது 3G ஏலத்தை பற்றை. அவர்களின் சந்தேகங்களும் அதற்கான விளக்கங்களும்.

3G னா என்ன? இப்ப புழக்கத்துல் இருக்குற 2G க்கும் அதுக்கும் என்ன வித்தியாசம்?

     3G என்பது மூன்றாம் தலைமுறை கம்பியில்லா தொலைதொடர்பு நுட்பம். இது புழக்கதில் இருக்கும் 2G ன் குறிப்பிடத்தகுந்த பரிணாம வளர்ச்சி. 2G ல் நம்மால் தகவல், குறுங்செய்தி, குரல் இவைகளை மட்டுமே பரிமாறிக்கொள்ள முடியும். ஆனால் 3G ல் நம்மால் இவைகளுடன் கூடுதலாக வீடியோக்களையும், மல்டீமீடியா தகவல்களையும், தரம் உயர்த்தப்பட்ட குரல் பரிமாற்றத்தையும் பெற முடியும்.

உலகத்தில் எத்தனை நாடுகளில் இந்த 3G உள்ளது?

     சுமார் 132 நாடுகளில் இந்த 3G தொழில்நுட்பம் புழக்கத்தில் உள்ளது.

எவ்வளவு பேர் 3G பயன்படுத்துகிறார்கள்?

     சுமார் 47 லட்சம். இதில் 13% 2G ல் இருந்து 3G க்கு மாறிய‌வ‌ர்க‌ள். ம‌ற்ற‌வ‌ர்க‌ள் நேர‌டியாக‌ உள் நுழைந்த்த‌வ‌ர்க‌ள்.

ஆசியாவில் 3G ன் வள‌ர்ச்சி எப்ப‌டி?

     ஆய்வொன்று கூறுகிற‌து "2013 ல் ஆசியாவில் சுமார் 5 கோடியே 70 ல‌ட்ச‌ம் 3G உப‌யோகிப்பாள‌ர்க‌ள் இருப்ப‌ர். அதில் இந்தியா 6 % கொண்டிருக்கும்."

3G தொழில்நுட்ப‌த்தின் முன்னோடிக‌ள் யார்?

     ஜ‌ப்பான் ம‌ற்றும் தென்கொரியா 3G ன் தாதாக்க‌ள்.மேலும் இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி, மற்றும் அமெரிக்காவும் குறிப்பிடத்தகுந்த பங்கு வகிக்கின்றன.

இந்தியாவில் 3G உரிமம் எத்தனை பேருக்கு வழங்கப்படும்?

     இந்தியா தொலைதொட‌ர்பு அடிப்ப‌ட‌யில் 22 வ‌ட்ட‌ங்க‌ளாக‌ ப‌குக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து. அதில் ஒவ்வொரு வ‌ட்ட‌த்திற்கும் 3 உரிம‌ங்க‌ள் வ‌ழ‌ங்க‌ப்ப‌டும். அந்த‌ 22 ல் 5 க்கு 4 உரிம‌ங்க‌ள் வ‌ழ‌ங்க‌ப்ப‌டும். ஆக‌ மொத்த‌ம் 71 உரிம‌ங்க‌ள். BSNL ம‌ற்றும் MTNL நிறுவ‌ன‌ங்க‌ள் 3G சேவையை த‌ற்பொழுதே அளித்து வ‌ருவ‌து குறிப்பிட‌த்த‌க்க‌து. இந்தியாவில் இவ்விரு பொதுத்துறை நிறுவ‌ன‌ங்க‌ளே 3G ன் முன்னோடிக‌ள். 3G முதன்முதில் BSNL இல் அதுவும் தமிழ்நாட்டில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். நினைவில்லாதோர்க்காக அதன் அழைப்பிதழை கீழே இணைத்த்ருக்கிறேன். படத்தின் மீது சொடுக்கினால் பெரிதாக தெரியும்.



ஏன் 3G ஏல‌ம் தாமாத‌மான‌து?

     ராணுவ‌த்திற்கு தேவையான‌ 3G அலைவ‌ரிசையை பாதுகாக்கும் வழிமுறை பற்றி பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்வ‌தில் தாம‌த‌மான‌தால் த‌னியார் நிறுவ‌ன‌ங்க‌ளுக்கு அலைவ‌ரிசை ஒதுக்குவ‌தில் சிக்க‌ல் ஏற்ப‌ட்ட‌து.

3G ஏல‌த்திற்கு பிற‌கு போட்டி அதிகமாகுமா?

     நிச்ச‌யமாக‌ இருக்காது. ஏனென்றால் இப்போது ச‌ந்தையில் உள்ள‌ நிறுவ‌ன‌ங்க‌ள் தான் இந்த‌ ஏல‌த்தில் ப‌ங்கெடுக்க முடியும். புதிய‌வ‌ர்க‌ள் ப‌ங்கெடுக்க‌ முடியாது. என‌வே போட்டி வ‌ழ‌க்க‌ம் போல‌தான் இருக்கு. சிறிது மாற்ற‌ம் இருக்க‌லாம். குறிப்பிடும் ப‌டியாக‌ ஏதும் இருக்காது.

3G உரிம‌ங்கள் எவ்வ‌ள‌வு கால‌த்திற்கு செல்லுப‌டியாகும்?

     20 வ‌ருட‌ங்க‌ள் அதாவ‌து 2030 வ‌ரை.

3G அலைக்க‌ற்றை ஒதுக்கீட்டின் துவக்க ஏல‌ விலை என்ன‌?

     துவக்க விலை 3500 கோடி. ஆனால் சுமார் 65000 கோடி வ‌ரை செல்லும் என‌ அர‌சு எதிர்பார்க்கிற‌து.

     போதுமா! இல்லை இன்னும் ஏதாச்சும் ச‌ந்தேக‌ம் இருந்தா பின்னூட்ட‌மிடுங்க‌. இது ந‌ம்ம‌ ஏரியா. So டீடெய்லா தெளிவுப‌டுத்திடுறேன்.....

     ஒரு ந‌ண்ப‌ர் கேட்டார். 3G ஆல் உல‌க‌ம் அழிய வாய்புள்ளதா என்று? இத‌ற்கு என‌து ப‌தில்... ஆம்!

********************************************************************************************
ரசிக்க:
     குமாரிகிருஷ்ணா அவர்கள் தனது தளத்தில் பல பயனுள்ள தகவல்களையும், மின்னூல்களையும் தருகிறார். சிறுவர் நீதிக்கதைகளின் மின்னூல் களஞ்சியமும் அதிலுண்டு அதற்கான இணைப்பு இதோ.

********************************************************************************************

சிந்திக்க:
     ஒரு உண்மையான நண்பன் வாழ்வின் நல்மருந்து.- பைபிள்.

********************************************************************************************



யோகமும்! காதலும்!




டாவின்சியின் ஓவியம் போல்
புதிர்களை புதைத்தவை உன் புன்னகை
உன் புன்னகையின் அர்த்தம் காண முயன்று
நான் தோற்று தூங்க போன இரவுகளில்
சேவல் கூவி முடித்திருந்தது
இடகலை பிங்கலை அல்லாமல்
சுழுமுனையில் சுவாசம் நின்றால்
சித்தம் சித்திக்கும் அது யோகம்
சரி என்றும் கூறாமல்
முடியாதென்றும் மறுக்காமல்
நடுநிலை வகிப்பது
சுவாசம் இருந்தும் மரணத்தை உணர்விக்கும்
இது காதல்.
இறைவா! எனக்கு ஏதேனும் வரம் தர எண்ணினால்
அவள் புன்னகையை அர்த்திக்கும் அகராதி தா!
****************************************************************************************************************

ரசிக்க:
      சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஆனந்த விகடனில் எழுதி வந்த ஆண்டவன் கட்டளை தரவிறக்க இங்கே சொடுக்கவும்

****************************************************************************************************************
சிந்திக்க‌:
      தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயங்காதே. தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. - லெனின்

காயகற்பமும்! Kung-Fu Panda வும்!!!




      கடந்த 14 தினங்களாக கடுக்காய் காயகற்பத்தினை முயற்சித்ததில் எனக்கு தோன்றுவது இதுதான். அனைத்து காயகற்பங்களின் முடிவும் குங் பூ பாண்டாவில் வரும் அந்த ஓலைச்சுருளில் அடங்கிய ரகசியம் தானென்று. இடையில் நேற்று ஏற்பட்ட உடல்நலக்குறைவால் காயகற்ப முயற்சி தடைப்பட்டுள்ளது. 14 நாள் அனுபவமே அற்புதம் (போதும்டா சாமி!!!) இருந்தாலும் விட மாட்டோம்ல.. எது எப்படியாயினும் ஒரு மண்டல காயகற்பத்தில் இன்னும் 28 நாட்கள் பாக்கி. முடிந்ததும் முழு விபரமும் இந்த பக்கத்திலேயே.....

*****************************************************************************
ரசிக்க:
         தபூ சங்கரின் "வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்!" தரவிறக்க இங்கே சொடுக்கவும்.
******************************************************************************
சிந்திக்க:
         செய்யத் தெரிந்தவன் சாதிக்கிறான். செய்யத் தெரியாதவன் போதிக்கிறான்.

                                - கர்னல் கீல்

உலக மொழிகளின் தரவரிசை!



சில நாட்களுக்கு முன் இந்திய மொழிகளின் தரவரிசையை பார்த்தோம். அது பேச தெரிந்தவர்கள் அடிப்படையிலானது. இப்போது நாம் பார்க்க இருப்பது உலக மொழிகளின் தரவரிசை. இந்த தரவரிசை அந்தந்த மொழிகளை முதன்மை மொழியாக பேசுபவரின் எண்ணிக்கை அடிப்படையிலானது.


நன்றி:Times of India
**********************************************************************************
தினம் தினம் புதிய தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை, பயனுள்ள பல தகவல்களை பெற இங்கும் நுழையலாம்.
**********************************************************************************
அமரர் கல்கியின் "பார்த்திபன் கனவு" படிக்கவும் தரவிறக்கவும் இங்கே சொடுக்கவும்.
**********************************************************************************
எவன் பெருமையடித்தானோ அவனை இறைவன் தாழ்வடையச் செய்வான்,
எவன் பணிவாக இருக்கிறானோ அவனை இறைவன் உயர்த்துவான்.

                                  - முஹம்மது நபி 

தொடுவானமும்! அவளும்!



காலுக்கு அடியில் விழுந்திருந்த காலத்தில்
மிதிக்க தோன்றியது
தலைக்கு மேல் பறந்த பின்பு
எட்டி எட்டி பார்த்தும் எட்டாமல்...
.....காதல்.....
*******************************************************************
தொட்டுவிடும் தூரத்தில்
தொடமுடியாத உயரத்தில்
தொடுவானமும்! அவளும்!
*******************************************************************

   அமரர் சுஜாதாவின் "பேப்பரில் பேர்" சிறுகதை படிக்கவும் 
தரவிறக்கவும் இங்கே சொடுக்கவும்.
*******************************************************************
திரு.கிருஷ்ணா அவர்கள் தனது வலைப்பூவில் பல பயனுள்ள கணிணி குறிப்புகளும், தகவல்களுக்கும் தருகிறார். நிச்சயம் உங்களுக்கும் பயன்படும். அவரது தளத்திற்கு செல்ல‌ இங்கே சொடுக்கி நுழையவும்.
*******************************************************************
சிந்திக்க:
   மனமாரக் காதலிக்கும் பெண்களுக்கு முன்னே எந்த ஒரு  
ஆணும் குழந்தையாகி விடுவான்!
                                              –தாகூர் 

அடுத்த திருவிழாவுல வாங்கிக்கிறேன்!!!!!



   நேற்று வெண்ணிலா கபடிகுழு திரைப்படம் பார்த்தேன். விவரிக்க வார்த்தைகளே இல்லை ஒவ்வொரு frame உம் அருமை. இயக்குனர் அருமையாக செதுக்கியிருக்கிறார். இந்த படத்தை பாராட்டி எழுத வேண்டுமென்றால் ஒவ்வொரு சீனையும் எழுத வேண்டும். எல்லா படங்களைப் போலும் இதிலும் சிற்சில குறைகள் இருந்தாலும் இந்த திரைப்படம் அவைகளை பின்னுக்கு தள்ளிவிட்டு இதயத்தில் நீங்காத இடம் பிடித்து விட்டது. சுசீந்திரன் சார் கலக்கீட்டீங்க. இதே போல் நிறைய எதிர்பார்க்கிறேன் உங்களிடம் இருந்து.

   தயவுசெய்து அனைவரும் இந்த திரைப்படத்தை பாருங்கள். கிராமத்தில் கபடியோடும் காதலோடும் வளர்ந்தவர்களுக்கு இந்த படம் நிச்சயம் பிடிக்கும். எனக்கு பிடித்ததை போல...

**********************************************************************************
   கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் கருவாச்சி காவியம் தரவிறக்க இங்கே சொடுக்கவும்.
**********************************************************************************
   கணிணி மென்பொருள் மற்றும் பல பயனுள்ள தகவல்கள் பெற இந்த தளத்திற்கும் செல்லுங்கள்.
**********************************************************************************
   எப்பொழுது நம்மை நாம் நேசிக்க ஆரம்பிக்கிறோமோ அப்பொழுது நம்மை பிறர் நேசிக்க ஆரம்பித்துவிடுவர். நம்மை நாமே தாழ்வாக எண்ணினால் பிறர் நம்மை மிகவும் தாழ்வாக எண்ணுவர்.
**********************************************************************************

இந்திய மொழிகளின் தரவரிசை!!!!!



மொழிகளை பல வகையிலும் வரிசைப்படுத்தலாம். அதாவது இனிமை, எளிமை, எழுத்துகளின் எண்ணிக்கை, பேசுவோரின் எண்ணிக்கை,அறிந்தவர்கள் எண்ணிக்கை இப்படி பல வகைகளில்.

இங்கு நாம் பார்க்கப் போகும் தரப்பட்டியல் மொழிகளை அறிந்தவர்களின் எண்ணிக்கை அடிப்படையிலானது.

இந்தியாவில் அதிக நபர்கள் பேச அறிந்த மொழி இந்தி, பேசுபவர்களின் எண்ணிக்கை 55 கோடியே 14 லட்சம். இரண்டாம் இடத்தில் இருப்பது ஆங்கிலம், 12 கோடியே 53 லட்சம். மற்ற இடங்களை அட்டவணையில் வகைப்படுத்தியுள்ளேன். எண்ணிக்கைக‌ள் கோடியில்.



நன்றி: Times of India நாளிதழ்

**********************************************************************************
சார்லி சாப்ளின் ன் வாழ்கை வரலாறு. தரவிறக்க இங்கே சொடுக்கவும்.
***********************************************************************************
புதுவை.com ல் பல பயனுள்ள கணிணி தகவல்களும், மென்பொருட்களும் கிடைக்கினறன. ஒரு முறை உள்ள போய் தான் பாருங்களேன்.
***********************************************************************************
சிந்திக்க:
உங்களுக்கு நேரும் துன்பங்களிலும் ஒரு நன்மை உண்டு. அது என்னவென்றால் உங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களின் அன்பின் அளவையும்,ஆதரவையும். எவர் உண்மையான நண்பன் என்பதையும் உணர்ந்து கொள்ள கிடைக்கும் தருணம் அது.

                                          -சொன்னது யார்?

அணுகுண்டின் ஆதி!!!

நேற்று எனது பள்ளி கால நண்பன்(ர்) மின்னஞ்சல் ஒன்று அனுப்பியிருந்தான். மின்னஞ்சல் முழுதும் எனக்கு பிடித்த ஒருவர், என்றும் நான் ரசிக்கும் ஒருவரின் புகைப்படங்கள். (உடனே நீங்க யாரை நினைக்கிறீங்கனு எனக்கு தெரியும். நான் அவன் இல்ல..).





நான் வியந்த,வியக்கும் மனிதர்களில் முக்கியமானவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். அந்த மின்னஞ்சல் முழுதும் அவரது அரிய புகைப்படங்கள். அதில் ஒரு கடிதமும் இருந்தது. அது அப்போதைய (1939) அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட் அவர்கள் நம்ம தலைவர் ஐன்ஸ்டீனுக்கு எழுதி இருந்தது.

படித்து பாருங்கள். அணுகுண்டின் ஆதி இந்த கடிதத்தில்...


மேலும் விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும்
*********************************************************************************
பல சுவாரஸ்யமான வலைதளங்களை திரு.சைபர்சிம்மன் அவர்கள் தனது வலைப்பக்கத்தில் அறிமுகப்படுத்தி வருகிறார். அவரது பக்கத்திற்கு செல்ல இங்கே சொடுக்கவும்.
*********************************************************************************
மதனின் "வந்தார்கள் வென்றார்கள்" தரவிறக்க இங்கே சொடுக்கவும்.
********************************************************************************
சிந்திக்க:

கற்பனைசெய்தல் மிக முக்கியமானது அறிவைக்காட்டிலும்.
‍ --ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

தற்கொலைக்கு ஓர் எளிய வழி!!!!



ப‌ட‌த்தின் மேலே இர‌ண்டு முறை சொடுக்கி பெரிதாக‌ பார்க்க‌லாம்.

************************************************************************
3G,4G என்றால் என்ன?---- அடுத்து வரும் பதிவுகளில்...
************************************************************************
அம‌ர‌ர் சுஜாதாவின் "க‌ட‌வுள் இருக்கிறாரா?" த‌ர‌விற‌க்க‌ இங்கே சொடுக்க‌வும்.
************************************************************************
சிந்திக்க‌:
எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர்கள் தாம் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள்.
- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
***********************************************************************

கசந்தினிக்கும் காபி!



சர்க்கரை சரியாய் கலக்காத காபி போல்
மேலே கசக்கிறது ஆனால்
இதயத்தின் அடியில் இனிக்கிறது
அவளின் நினைவு.

உயரம் காட்டாது உன் பெருமையை!

எனது தொழில் சார்ந்த விசயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
ஒவ்வொருவரும் முதன் முதலில் செல்போன் டவரை பார்க்கும் போது நிச்சயம் ஆச்சர்யபடுவார்கள். நிறைய பொருட்செலவில் அமைக்கப்படும் ஒரு செல்போன் டவர் வாயிலாக ஒரே நேரத்தில் எத்தனை பேர் பேச முடியும் என்று நினைக்கிறீர்கள்? விடை பதிவின் இறுதியில்.

*******************************************************************
திரு.சூர்யா கண்ணன் அவர்கள் தனது blog ல் பல்வேறு கணிணி சார்ந்த பயனுள்ள தகவல்களை தமிழில் தருகிறார். நெருப்பு நரி உலவிக்கு அவர் தரும் நீட்சிகள் பற்றிய தகவல் நிச்சயம் அனைவருக்கும் தேவைப்படும். அவரது வலைதளத்திற்கு செல்ல
இங்கே
சொடுக்கவும்.
********************************************************************
அமரர் சுஜாதாவின் "ஏன் எதற்கு எப்படி" டவுன்லோட் செய்ய இங்கே சொடுக்கவும்.
********************************************************************
செல்போன் டவரின் டெக்னிகல் பெயர் Base Transceiver Station சுருக்கமாக BTS என்று கூறுவோம்.பொதுவாக ஒரு BTS வாயிலாக ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 30 பேர் தான் பேச முடியும்.

********************************************************************
சிந்திக்க:
தன்னை ஒரு அறிவாளி என்று நினைப்பவனே ஒரு பெரிய
முட்டாள்! -வால்டேர்

நாள் சுருங்கிய‌து!!!

எனக்கும் தொழில்நுட்ப பதிவு எழுத வேண்டுமென்று ஆசை தான். ஆனால் நான் தான் அதில் சூன்யம் ஆச்சே அதனால் இன்று முதல் இந்த வலைப்பக்கத்தில் எனது தொழில் சார்ந்த செய்திகளையும், அறிவு இயல் சார்ந்த விசயங்களையும் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். சில நேரங்களில் எனது படைப்புகளையும் (அதாங்க கவிதை ங்ற பேருல)பதிவிட உத்தேசித்து உள்ளேன். நலம் விரும்பிக‌ள் வழக்கம் போல் தங்கள் ஒளிவு மறைவற்ற கருத்துகளை பின்னூட்டமிட வேண்டுகிறேன்.

*****************************

சிலியில் நடந்த நிலஅதிர்வு அனைவரும் அறிந்து வருந்தியதே 6.6 ரிக்டர் என பதிவான இந்த அதிர்வு புவியில் ஏற்படுத்தி இருக்கும் மாறுதல்கள் நிறைய என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதில் ஒன்று,



இந்த நில அதிர்வின் காரணமாக புவி தனது அச்சில் இருந்து 8 செ.மீ விலகி உள்ளது. அதன் காரணமாக புவியின் சுழற்சி சற்றே அதிகமாகி உள்ளது. விளைவு இனி ஒரு நாளின் நீளம் 1.26 மைக்ரோ வினாடிகள் குறையுமாம்!!!!

ஆக‌வே இனி ஒன்றாம் தேதி 37.8 மைக்ரோ வினாடிக‌ள் முன்ன‌மே வந்து விடும். ஹைய்யா ஜாலி......


*****************************
சிந்திக்க‌:

"எந்த‌ ஒரு காரிய‌த்தையும் எளிமையாக‌ செய். ஆனால் எளிமையான காரியங்க‌ளை அல்ல‌." ‍ ----ஆல்ப‌ர்ட் ஐன்ஸ்டீன்.

அங்காடித்தெருவில் நான்!!!




வைரமுத்துவின் வரிகளைப் போல்
எஸ்.பி.பி ன் குரலைப் போல்
மழலையின் சொல் போல்
Tom & Jerry கார்டூன் போல்
ச‌ன்ன‌லின் வ‌ழி ச‌தறி வ‌ரும் ம‌ழைத்துளி போல்
இன்று பூத்த‌ ம‌ல‌ரின் மேல் ப‌னித்துளி போல்
எப்போதும் ர‌சிக்க‌ தோன்றுகிற‌து
உன் முக‌த்தில் உள்ள‌ ப‌ருவை
அங்காடியை சுற்றி வ‌ரும் நாயைப் போல்
என் மன‌ம் உன் பின்னேயே வாலாட்டி வ‌ருகிறது.

சின்ட்ரெல்லாவின் ஒற்றை செருப்பும், இளவரசனின் ரெட்டை சோகமும்!!!


Picture Courtesy: http://www.drawingboard.org

கிண்டியில் இருந்து அண்ணா பல்கலை செல்ல‌
21G ல் கடைசி படிக்கட்டில்
ஒற்றை காலில் தொங்கியபடி
வியர்வையில் நனைத்தபடி
வாழ்வை நொந்தபடி நான்
காற்றில் சிக்கிய என் கேசமும்
எதைஎதையோ நினைத்தபடி என் மனமும்
மிரட்சியில் விழிகளும் அலைபாய்ந்தன‌
படிக்கட்டு ஓர சன்னல் இருக்கையை
கண்கள் கண நேரம் கடந்தது
நிறுத்தம் வரும் வரையிலும்
அங்கேயே நிலைக்குத்தி நின்றது
அம்மா சுடும் தோசை போல் வட்ட முகம்
ரோஜாவின் இதழை இதழாய்
இதயத்தை இன்றளவும் குத்தும் கூரிய நாசி
மையலில் வீழ்த்தும் மையிட்ட விழிகள்
அவளை பார்த்த அந்த நொடி
ஐஸ்வர்யா ராயும் அழகு குறைந்தவளானாள்
மகிழ்ச்சி: அவளை கண்ணீமைக்காமல் பார்த்தது
சோகம் : அவள் ஒரு கணம் கூட எனை பார்க்காதது
அன்றிலிருந்து எப்பொழுதெலாம் 21G யை
பார்த்தாலும் அப்பொழுதெலாம்
சின்ட்ரெல்லாவின் ஒற்றை செருப்பை பார்க்கும்
இளவரசனின் ரெட்டை சோகத்தில் நான்...

My Name is Khan

நான் இதுவரை கேள்விப்படாத ஒரு நோய்... Asperger syndrome..
மன்னிக்கவும் அது நோய் அல்ல ஒரு குறைபாடு. Its not a disease its a disorder.



இக்குறைபாடுள்ள மனிதராக ஷாரூக் நடித்துள்ள படம் தான் My Name is Khan.
நீண்ட எதிர்பார்பிற்கு பிறகு (சுமார் 7 வருடங்களுக்கு பிறகு)ஷாரூக் காஜோல் இணைந்து நடித்த படம் கரன் ஜோஹர் படம். படத்தில் காதல் காட்சிகள் குறைவே. ஆனால் இருக்கும் சில காட்சிகளும் நிறைவே. (Made for each other in screen)

ஷாரூக் அமெரிக்க அதிபரை பார்க்கப் போகும் அந்த இரண்டாவது பாதி அருமை.
ஒரு கிறித்துவ சபை ஆப்பிரிக்க நாடொன்றுக்கு நிதி திரட்டுகிறது. அத்றகு நிதி உதவி அளிக்கிறார் ஷாரூக் அப்போது அந்த பெண்மணி இது கிறித்துவர்களுக்கான் சபை என்கிறார் அதற்கு ஷாரூக் அந்த‌ பணத்தை அங்கு வாழும் கிறித்துவர் அல்லாதவர்க்கு கொடுக்க சொல்கிறார்...

நீங்கள் நன்றாக பாருங்கள் அந்த காட்சி மறைமுகமாக நிறைய சொல்வதை உணர்வீர்கள்.

புயலால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவது...

Repair almost Everything....

Garlic Tea...

என்று இந்த படத்தில் ரசிப்பதற்கு, உண்ர்வதற்கு நிறையவே இருக்கிறது..

ஹோங்கே காமியாப்
ஹோங்கே காமியாப்
ஹம் ஹோங்கே காமியாப் ஏக் தின்....
மன்மே ஹே விஸ்வாஸ்
பூரா ஹே விஸ்வாஸ்
ஹம் ஹோங்கே காமியாப் ஏக் தின்....

இப்பொழுது நான் முணுமுணுத்துக் கொண்டிருக்கும் பாடல்.... நீங்களும் முணுமுணுப்பீர்கள் படம் பார்த்த பிறகு...

ஆடு பாம்பே !!!!

‘உளியிட்ட கற்சிலையில் உண்டோ உணர்ச்சி ?

உலகத்தில் மூடர்களுக்குண்டோ உயர்ச்சி ?

புலியிட்ட செம்பினில் குற்றம்போமோ

அஞ்ஞானம் போகாது மூடருக்கென்று ஆடு பாம்பே ‘

பூசை செய்ததாலே சுத்த போதம் வருமோ ?

பூமி வலம் செய்ததனால் புண்ணியம் உண்டோ

ஆசையற்ற காலத்திலே ஆதிவத்துவை

அடையலாம் என்று துணிந்தாடு பாம்பே

தன்னை அறிந்து ஒழுகுவோர் தன்னை மறைப்பார்

தன்னையறியாதவரே தன்னைக் காட்டுவார்

பின்னையொரு கடவுளை பேண நினையார்

பேரொளியைக் காணுவர், என்றாடு பாம்பே ‘ ‘

நேற்று முன்தினம் ரத்தக்கண்ணீர் படம் பார்த்தேன். அதன் முடிவில் வரும் இந்த பாம்பாட்டி சித்தரின் பாடல் எனக்குள் எதையோ துவக்குவதை உணர்கிறேன்..

மூன்றடி திருக்குறள்



வானத்தையும் தாண்டி
எனக்கான விடியலைத் தேடி
கனவுகள் பெரிது ஆயினும்
அடைந்திடும் உறுதியும் பெரிது
என் லட்சியத்தின் குறுக்கே வரும்
இதமான இம்சை நீ
உன் இச்சை கடந்தால் மட்டுமே
லட்சியம் கைக்கெட்டும் நிலையில் நான்
சூரியனை பிடிக்க பறந்த்திடும் பறவை நீ
வானத்தின் எல்லை தேடும் முட்டாள் நான்.
மூன்றடி திருக்குறள் நாம்
சாத்தியமில்லா பொருத்தமுள்ள‌ ஜோடி நாம்.

பசுமை நிறைந்த நினைவுகளே...

இந்த படத்தை டவுன்லோட் பண்ணி ரொம்ப நாளாச்சு. நேத்து கெடச்ச கொஞ்ச கேப் ல பார்த்தேன்.

அசந்துட்டேன்!!! எனது Engineering கால வாழக்கையை ஓரளவு கண்முன் கொண்டு வந்தது. படம் முடிந்து இரவு கண் மூடி தூங்க நினைத்தால் கண்ணுக்குள் என் கல்லூரி கால நினைவுகள். பசுமையான அந்த நினைவுகள் என் இரவை இனிமையக்கி விடியலை வேகமாய் வர செய்து விட்டது....

ஹிரானிக்கு எனது நன்றிகள்....



என்னை ஆச்சர்யபடுத்தும் மனிதர்களில் அமீர்கானும் ஒருவர். எப்படி அமீர் நல்ல கதைகள் உங்களை தேடி வருகின்றன?...

படத்தின் துவக்கத்தில் வரும் பாடலை இறுதி வரை இசைக்க விட்டிருப்பது அருமை. நெருடல் இல்லாத இதமான இசை படம் முழுதும்.

படத்தில் வரும் கல்லூரி மாணவர்கள் அத்தனை பேரின் சாயல் கொண்ட
கேரக்டர்கள் ஒவ்வொரு கல்லூரியிலும் ஒவ்வொரு பேட்சிலும் உண்டு. ஆம் எனது பேட்சிலும் உண்டு... அத‌ ஒரு தொடர் பதிவா போட உத்தேசம்... (இனிமே இவன் blog பக்கமே வரக்கூடாதுடா சாமினு நீங்க முணுமுணுக்கறது கேட்குது.. ஆனாலும் விடமாட்டேன்...)

படத்தில் ஆங்காங்கே சிறுசிறு குறைகள் இருப்பினும் அது பாற்கடலில் விழுந்த ஒரிரு நீர்துளிகள்....

கண்டிப்பாய் பார்க்க வேண்டிய படம்.... வேலை முறைப்பதால் விமர்சனம் இத்துடன் முற்றுகிறது...

ALL IS WELL


கூடுதல் தகவல்: (விக்கிபீடியாவில் இருந்து சுட்டது)

.It is expected to be the first Indian film to be officially released on YouTube, within 12 weeks of releasing in theatres.
.The film also uses real inventions by little known people in India's backyards.
.The brains behind the innovations were Remya Jose, a student from Kerala, who created the exercise-bicycle-cum-washing-machine.
.Mohammad Idris, a barber from Meerut district in Uttar Pradesh, who invented a bicycle-powered horse clipper.
.Jahangir Painter, a painter from Maharashtra, who made the scooter-powered flour mill.

எங்கடா அவன்.. கையில கிடச்சான்னா அவ்ளோதான்...


நான் என்னோட வேலையில ரொம்ப பிஸி (?) அதனால சமீப காலமா தமிழ் படங்கள் பார்க்க முடியறது இல்ல. ரெண்டு நாளைக்கு முன்னாடி பெங்களூர் ல இருந்து ஒரு நண்பன் போன் பண்ணினான் "டேய் மச்சான்! ஒரு படம் வந்துருக்கு டா. செம சூப்பர் மச்சி. ஹாலிவுட் டச் ல இருக்கு. உனக்கு வேற அமரர் கல்கி னா பிடிக்குமே அவரோட புதினங்கள் பார்த்திபன் கனவு, பொன்னியின் செல்வன் பேஸ் பண்ணின படம் தவறாம பாரு " அப்படினு சொன்னான். (நான் அவ‌னுக்கு எந்த‌ கெடுத‌லுமே ப‌ண்ணின‌து இல்ல‌யே.. :-( )

சரி நண்பன் சொல்றானேனு நானும் எனது இடையறாத பணிகளுக்கு நடுவே டாரண்ட் உதவியால தரவிறக்கம் செய்து பார்த்தேன்.

மண்ணாங்கட்டி... கல்கியோட புதினங்களுக்கும் அந்த படத்துக்கும் ஒரு வரி கூட சம்பந்தத்தைக் காணோம். என்ன ஆச்சு செல்வ ராகவனுக்கு. நல்லா தான போய்கிட்டு இருந்துச்சு.


டைரகடர் நல்லா குழப்பி போயிருகார்னு தெளிவா தெரியுது. நல்ல கதையில இலங்கை பிரச்சனையை நுழைக்க முயற்சித்த‌து முழு படத்தையும் நசமாக்கிருச்சு. 2 நிமிடம் வேக வைக்க வேண்டிய நூடுல்ஸ 20 நிமிசம் வேக வைச்சா என்ன ஆகுமோ அப்படி ஆகியிருக்கு கதை.

அதுக்காக படம் முழுசும் வேஸ்ட்னு சொல்ல முடியாது. ஆங்காங்கே சில விசயங்கள் ரசிக்கும் படியா இருக்கு. படத்தில் ரெண்டு ஆறுதல் ஒண்ணு பார்த்திபன். தனக்கு கொடுத்த காசுக்கு மேலேயே மெனக்கெட்டு இருக்காரு ஆனா என்ன பண்றது விழலில் இறைத்த நீர். இன்னொரு ஆறுதல் ரீமா சென். ரீமா உங்களுக்கு நல்லா நடிக்கவும் வருது. மத்தபடி கேரகடர் செலக்ட் பண்றதிலேயே ராகவன் சறுக்கிட்டார்.

அந்த ராணுவ மேஜர் (அதாங்க கற்றது தமிழ் ல வர ஸ்கூல் வாத்தி) பார்க்க சரத் பொன்சேகா மாதிரியே இருக்காருங்கறதுக்காக அவரயா செலக்ட் பண்றது? சுத்தமா ஒட்டவே இல்ல.

மொத்த‌த்துல‌ க‌தையே ம‌னசுல‌ ஒட்ட‌ல‌... ஒரு ந‌ம்பிக்கைகுரிய‌ விச‌ய‌ம் என்ன‌னா ரெண்டாம் பாக‌ம் எடுக்க‌ போறாங்க‌ளாம்... ஹ்ம்ம்.. அதுல‌யாவ‌து த‌வ‌றுக‌ளை ச‌ரி செய்வீங்க‌ளா செல்வா?.........

இந்த பதிவோட தலைப்பு, என்னய அந்த படத்த பார்க்க சொன்ன அந்த பிரியமான நண்பன பற்றி மற்றவர்களிடம் விசாரிக்கும் வாசகம்..

இரயில் பெண்!



அன்றொரு நாள்
கோவை விரைவுத் தொடர்வண்டியில்
எப்போதும் வாயிலின் படியில்
அமர்ந்து பயணிக்கும் நான்
அன்று பெட்டியின் நடுவில்
அவளின் விழியீர்ப்பு மையத்தில்
பிரம்மனும் தோற்றிடும் படைப்பு
பார்க்கும் பொழுதெல்லாம் செல்லரிப்பு
அவள் நாலைந்து முறை தவறுதலாக‌
சில் மைக்ரோ விநாடிகள் எனைப் பார்த்தாள்
நான் ஒரு nano விநாடியும்
தவறாமல் அவளைப் பார்த்திருந்தேன்
அது மானைப் பார்க்கும் புலியின் பார்வையல்ல‌
ஒரு பூவைப் பார்க்கும் பட்டாம்பூச்சியின் பார்வை
ஏழு மணிநேரம் கழிந்தது
நானிறங்க வேண்டிய நிறுத்தமும் வந்தது
என்னை இறக்கி விட்டு விட்டு
கேலியாய் சங்கூதிச் சென்றது ரயில்
அவளோடு என் இத‌யத்தையும் சுமந்து......

நீ என்று தெரிந்தும்!!!




நெருப்பென்று தெரிந்தும் விட்டில்பூச்சி
நீயென்று தெரிந்தும் நான்!!!!

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்!!!!

எனது "தனி"க்குடித்தனத்தின் அழகு.....


பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்த வேண்டுகிறேன்... :‍)

மாநகரத்து மடந்தை!!!




ஒரு மாலை நேரம்
காற்றில் மழையின் ஈரம்
தெருவின் முடிவில்
களங்கலான் வெளிச்சத்தில்
களங்கமற்ற முகம்
சரியாய் பார்பதற்கு முன்
மறைந்திடும் எரிநட்சத்திரம்
போல்..............
மீண்டும் என்று வரும்
அந்த மாலை நேரம்
அதே மழையின் ஈரம்....

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருத்தால் கீழே ஓட்டளித்து செல்லுங்கள்...