" பகுத்தறிவு நமக்கு தந்து இருப்பதெல்லாம் அச்சமும், குழப்பமும் தான் "
என்ன உளறுகிறாய் ! மனிதன் அன்று கண்ட அக்னியில் இருந்து இன்று கண்ட அணுஉலை வரை அனைத்தும் பகுத்தறிவின் படைப்புகள் தானே? என்று நீங்கள் கேட்பது எனக்கும் கேட்கிறது.
பகுத்தறிவாளர்களே ! சற்று தங்களது கருத்தை பகுத்து பாருங்கள் அந்த பகுத்தறிவின் படைப்புகளோடு இலவச இணைப்பாக அச்சமும், குழப்பமும் விளைந்து இருப்பதை.
இன்று உலகின் எதிர்புறம் இருப்பவன் எளிதாய் இங்கு வருகிறான், நோய்கள் வரும்முன்னே காப்பதற்கும் வந்த பின்பு ஓட்டுவதற்கும் மருந்துகள் உள்ளன, கொளுத்தும் வெயிலிலும் ஊட்டியில் இருக்கும் உணர்வை தர குளிர் சாதன வசதிகள் இவையெல்லாம் பகுத்தறிவின் ஒரு சில எச்சங்கள் என்பதை மறவாதே!
பகுத்தறிவாளர்களே ! சற்று திரும்பி பாரும் உமது கருத்தை அந்நிய படையெடுப்பும், மக்கள் தொகை பெருக்கமும், இயற்கை போர்வை ஓசோனில் விழுந்த ஓட்டையை தைக்க திணறிக் கொண்டு இருக்கும் இன்றைய நிலையும் அதே பகுத்தறிவின் மிச்சங்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
அப்படியானால் பகுத்தறிவு பாவம் என்கிறாயா? மனித அறிவு மழுங்கலாய் இருப்பதே நலம் என்கிறாயா?
"பொய்மையும் வாய்மை யுடைத்து புரைதீர்த்த
நன்மை பயக்கும் எனின் "
பொய்யுரைப்பது குற்றம் தான் ஆனால் நன்மை விளையுமென்றால் பொய்யுரைப்பதில் தவறில்லை இது வள்ளுவர் வாக்கு.. மனித சமூகம் அச்சம் குறைந்த நிம்மதி வாழ்வு வாழ மனித மதி மழுங்கலாகவே இருந்து இருந்தால் தவறில்லை.
பகுத்தறிவுக்கு பாடை கட்டுவதா? படிப்படியாய் பல லட்சம் ஆண்டுகள் கூர்மையாக்கிய மூளையை மழுங்கடிப்பதா?
நல்ல கேள்வி ! பரிணாம வளர்ச்சி பெற்ற மனிதனை மீண்டும் கற்காலத்தின் காட்டில் விடமுடியது. ஆனால் எல்லையற்றதாய் நீங்கள் கூறும் பகுத்தறிவுக்கு எல்லை கண்டு விட்டால்!!!!!!!!!
பகுத்தறிவுக்கு எல்லையா?
ஆம் ! இனி வரும் பதிவுகளில் நாம் அனைவரும் சேர்ந்து பகுத்தறிவுக்கு எல்லை காண்போம் வாருங்கள்.
தயவுசெய்து தங்களின் கருத்துக்களைப் பின்னூட்டமிடுஙகள்....
0 comments:
Post a Comment