திரையில் புருஸ்லீ கற்று தரும் பத்து எளிய உண்மைகள்
ஆழ்ந்து புரிந்து கொள்ளப்பட வேண்டியவை.
1)எதிரியிடம் உன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாதே.
2)தாக்கபட வேண்டிய இடத்தை நோக்கி உன் கண்களை
நகர்த்தாதே.
3)சண்டையை எப்போதும் நீ துவக்காதே.
4)எதிலிருந்தும் உனக்கானதை கற்றுக்கொள்,
5)சண்டையிடுவதில் அவசரம் காட்டாதே
அது பலவீனமானது.
6)அடிபட்டு விழுவது தவறில்லை. அதன்
சுவடே இல்லாமல் எலாஸ்டிக் போல
உடனே எழுந்து சண்டையிடு.
7)பலம் உன் உடலில் இல்லை. மனதில் தானிருக்கிறது.
8)போராளியின் ஒரே துணை மௌனம் மட்டுமே.
9)தன்னை வெளிப்படுத்திக் கொள்வதே கலை.
10) மூச்சை உற்று நோக்கி பழகு. சீராக்கு.
சண்டையிடுவதற்கு அதுவே ஆதாரம்.
நன்றி:http://sramakrishnan.com/view.asp?id=331&PS=1
புரூஸ் லீ யும் புத்தமும்!
Posted by ATOMYOGI at 5:42 PM 0 comments
மீள்சந்திப்பு
மழை நின்ற பிறகும்
நிலைத்திருக்கும் ஈரமாய்
பிரிந்த பிறகும் நமது......
End of the every rain
Gives happy of its pleasure
Leaves longing for next arrival
Like.... US.....
Posted by ATOMYOGI at 9:00 PM 0 comments
Labels: get together, sudhagar, sudhagarceg, tamil, tamil kavidhai, தமிழ் கவிதை, மீள்சந்திப்பு
பூவோடு சேர்ந்த நார்!
தராசின் ஒரு தட்டில்
உலகின் அத்தனை அழகிகளையும்
ம்ற்றொரு தட்டில்
உனது ஒரு ஜோடி காலணிகளையும்
வைத்தால்
உன் காலணித் தட்டு கீழிறங்காதா!!!!
Posted by ATOMYOGI at 3:21 PM 0 comments
பாரதி!
எனக்கு மிகவும் பிடித்த பாரதியின் கவிதைகளில் ஒன்று!
நீளில் உயிர்தரிக்க மாட்டேன் கரு
நீலி என்னியல்பு அறியாயோ?
தேடிச் சோறு நிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?
நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் - அவை
நேரே இன்றெனக்குத் தருவாய்? - என்றன்
முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும்
மூளா தழிந்திடுதல் வேண்டும் - இனி
என்னைப் புதியவுயி ராக்கி - எனக்
கேதுங் கவலையறச் செய்து - மதி
தன்னை மிகத்தெளிவு செய்து - என்றும்
சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்
தோளை வலியுடைய தாக்கி - உடற்
சோர்வும் பிணிபலவும் போக்கி - அரி
வாளைக் கொண்டுபிளந் தாலும் - கட்டு
மாறா வுடலுறுதி தந்து - சுடர்
நாளைக் கண்டதோர் மலர்போல் - ஒளி
நண்ணித் திகழுமுகந் தந்து - மத
வேளை வெல்லுமுறைகூறித் - தவ
மேன்மை கொடுத்தருளல் வேண்டும்.
எண்ணுங் காரியங்க ளெல்லாம் - வெற்றி
யேறப் புரிந்தருளல் வேண்டும் - தொழில்
பண்ணப் பெருநிதியம் வேண்டும் - அதில்
பல்லோர் துணைபுரிதல் வேண்டும் - சுவை
நண்ணும் பாட்டினொடு தாளம் - மிக
நன்றாவுளத் தழுந்தல் வேண்டும் - பல
பண்ணிற் கோடிவகை இன்பம் - நான்
பாடத் திறனடைதல் வேண்டும்.
கல்லை வயிரமணி யாக்கல் - செம்பைக்
கட்டித் தங்கமெனச் செய்தல் - வெறும்
புல்லை நெல்லெனப் புரிதல் - பன்றிப்
போத்தைச் சிங்கவே றாக்கல் - மண்ணை
வெல்லத் தினிப்புவரச் செய்தல் - என
விந்தை தோன்றிட இந்நாட்டை - நான்
தொல்லை தீர்த்துயர்வு கல்வி - வெற்றி
சூழும் வீரமறி வாண்மை.
கூடுந் திரவியத்தின் குவைகள் - திறல்
கொள்ளுங் கோடிவகைத் தொழில்கள் - இவை
நாடும் படிக்குவினை செய்து - இந்த
நாட்டோர் கீர்த்தியெங்கு மோங்கக் - கலி
சாடுந் திறனெனக்குத் தருவாய் - அடி
தாயே! உனக்கரிய துண்டோ? - மதி
மூடும் பொய்மையிரு ளெல்லாம் - எனை
முற்றும் விட்டகல வேண்டும்.
ஐயம் தீர்ந்துவிடல் வேண்டும் - புலை
அச்சம் போயொழிதல் வேண்டும் - பல
பையச் சொல்லுவதிங் கென்னே! - முன்னைப்
பார்த்தன் கண்ணனிவர் நேரா - எனை
உய்யக் கொண்டருள வேண்டும் - அடி
உன்னைக் கோடிமுறை தொழுதேன் - இனி
வையத் தலைமையெனக் கருள்வாய் - அன்னை
வாழி! நின்ன தருள் வாழி!
ஓம் காளி! வலிய சாமுண்டீ!
ஓங்காரத் தலைவி! என் இராணி!
இந்த கவிதையை நெடு நாட்களுக்கு பிறகு என் நினைவுக்கு கொணர்ந்த ஸ்வாமி ஓம்காருக்கு நன்றி(http://vediceye.blogspot.com/2009/09/blog-post_6894.html)
Posted by ATOMYOGI at 6:51 PM 0 comments
கிருஷ்ணனைப் பிடிக்கிறது!
இப்பொழுது எல்லாம் கிருஷ்ணனை மிகவும் பிடிக்கிறது. அதுவும் ராதையுடன் இருப்பவனை
(நன்றி:http://www.arunachala-live.com/krishna/krishna_1.htm)
Posted by ATOMYOGI at 3:10 PM 0 comments
வினோதம்
சில நேரங்களில்,
சிறைபடுதலும் இனிக்கிறது,
சுதந்திரமும் கசக்கிறது,
காத்லில் மட்டும்
இது சாத்தியமாகும் வினோதமென்ன?!!!!
Posted by ATOMYOGI at 3:10 PM 0 comments
சாணக்கியன் சொன்னது
கிமுக்களில் வாழ்ந்து சந்திரகுப்த மவுரியரின் அரசவையை அலங்கரித்த சாணக்கியர் அர்த்தமாய் பல விஷயங்களை தனது அர்த்தசாஸ்திரத்தில் சொல்லிப்போயிருக்கிறார்.அந்த கால தட்சசீல பல்கலைக்கழகத்தில் புரபசராய் இருந்தவராச்சுதே. சிறந்த ராஜ தந்திரி.
அவரது பொன்னான வாக்குகள் சில இங்கே.
மிகவும் நேர்மையாக இருக்காதீர்கள்; ஏனெனில் நேரான மரங்கள் முதலில் வெட்டப்படும்; நேர்மையானவர்களே முதலில் பழிதூற்றப்படுவார்கள். கொஞ்சம் வளைந்து கொடுங்கள். வாழ்க்கை, லகுவாய் இருக்கும்.
இங்கு விஷமற்ற பாம்பு கூட தன்னை விஷமுள்ள பாம்பு போல காட்டிக்கொள்ள வேண்டும்.
உன் இரகசியங்களை எவரிடம் பகிர்ந்து கொள்ளாதே. அது உன்னை அழித்து விடும். இது தான் மிகப்பெரிய குரு மந்திரம்.
ஒவ்வொரு நட்புக்கு பின்னாலும் ஒரு சுயலாபம் இருக்கின்றது. சுயலாபம் இல்லாத நட்பே இல்லை. இது ஒரு கசப்பான உண்மையே.
ஒரு வேலையை செய்யத்தொடங்கும் முன் இந்த மூன்று கேள்விகளையும் கேட்டுக்கொள். ஏன் இதை செய்கின்றேன்? இதன் முடிவு என்னவாக இருக்கும்? இதில் நான் வெற்றிபெறுவேனா இல்லையா? என ஆழமாக யோசித்து அதில் நல்ல விடைகள் கிடைத்தால் மட்டுமே அந்த பணியை செய்யத் தொடங்கு.
பயம் உன்னை நெருங்கத் தொடங்கும் போதே அதை தாக்கி அழித்து விடு.
ஒரு பணியைச் செய்யத்தொடங்கியப் பின் தோல்வியைகுறித்து பயம் கொள்ளாதே. அப்பணியை நிறுத்தவும் செய்யாதே. தன் பணியை செவ்வனே செய்பவர்களே மிக மகிழ்ச்சியான மனிதர்கள்.
மலர்களின் வாசம் காற்று வீசும் திசையில் மட்டுமே போகும்.ஆனால் ஒருவர் செய்யும் தர்மமோ நாலாதிசையும் செல்லும்.
ஒருவன் தான் செய்யும் செயல்களாலேயே மகானாகின்றான். பிறப்பினால் அல்ல.
உன் குழந்தையை முதல் ஐந்து வருடங்கள் செல்லமாக வைத்துக்கொள்.அடுத்த ஐந்து வருடங்களும் திட்டி தீர்த்துக்கொள்.பதினாறு வயதை எட்டும் போது உன் நண்பனைப் போல நடத்து.தலைக்கு மேல் வளர்ந்துவிட்ட உன் பிள்ளைகள் தான் உனக்கு உற்ற நண்பர்கள்.
குருடர்களுக்கு முகம் பார்க்கும் கண்ணாடி எப்படி உதவாதோ அப்படியே முட்டாள்களுக்கும் புத்தகங்கள் உதவாது.
கல்வியே சிறந்த நண்பன். நன்கு கற்றவனுக்கு செல்லும் இடமெல்லாம் மரியாதை உண்டு. கல்வியானது இளமையையும் அழகையும் வீழ்த்திவிடும்.
நன்றி: http://pkp.blogspot.com/search?updated-max=2009-07-20T12%3A41%3A00-04%3A00&max-results=5
Posted by ATOMYOGI at 8:00 PM 0 comments
அழகு
உன் அழகான கையெழுத்தைக் கண்டதும்
காகிதத்தை கட்டியணைக்கத் தோன்றியது
உனது அந்த ஒட்டெழுத்துக்கள்
என் இதயமெங்கும் ஒட்டிக்கொண்டது
ஒவ்வொரு வாக்கியத்தினை வாசிக்கும் பொழுதும்
முற்றுப்புள்ளியே வரக்கூடாதென மனமேங்கியது
கடிதத்தின் இறுதியில் நீ இட்டிருந்த கையெழுத்து
மயிலாசனத்து கோஹினூரை ஒத்திருந்தது
உன் கையெழுத்து அழகு
நீ வரையும் ஓவியங்கள் அழகு
இறைவன் வரைந்த ஓவியமாகிய
நீயோ கொள்ளை அழகு
உன் கடிதத்தை படித்ததும் நான்
கற்றுக்கொண்டது என்னவெனில்
உன் பெயருக்கு பொருள் அழகு.....
குறிப்பு: இது முற்றிலும் கற்பனையே. யாரையும் தொடர்புபடுத்தி எழுதப்பட்டதல்ல.
Posted by ATOMYOGI at 6:09 PM 0 comments
JTO Phase I Training Order
Posted by ATOMYOGI at 12:58 PM 0 comments
Labels: JTO 2007 TRAINING ORDER, JTO sudhagar
கடம்பூர் காட்டுப் பயணம்
கடம்பூர்: பலர் இந்த மலைப்பகுதியின் பெயரை மறந்தே விட்டோம். சந்தனக்காட்டு வீரப்பன் இருந்த வரையில் நமது பாரளுமன்ற மாளிகைக்கு நிகராக நாளிதழ்களில் வலம் வந்த அடர்ந்த காடுகள் கொண்ட மலைப்பகுதி தான் கடம்பூர்.
எனக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது அங்கு செல்ல... சென்ற பிறகு தான் கண்டு கொண்டேன் வீரப்பன் தனது வாழ்க்கையினை எவ்வளவு ரசித்து இருக்கிறான் என்று...... மிகவும் அற்புதமான இயற்கை வளங்கள் பல(சந்தன மரங்கள் உட்பட) நிறைந்த பகுதி.
நான் சென்ற நாள் அமாவசை என்பதால் மலைவாழ் மக்கள் அடர்ந்த காட்டுக்ககுள் செல்ல அனுமதிக்கவில்லை. (மந்திரவாதிகள் உலாவும் நாளாம். தங்களின் மந்திர பணிகளுக்காக சில அரிய வேர்கள், மரப்பட்டைகளை அன்று தான் சேகரிப்பார்களாம்)
யானைகளின் எச்சங்களை ஆங்காங்கே காண முடிந்தது. மலைவாழ் மக்கள் அளித்த உணவு எனது தாய்வழி பாட்டியை நினைவூட்டியது.(அந்த ஒளிப்படத்தினையும் இணைத்துள்ளேன்) பதிவின் கொள்ளளவு கருதி 3 படங்களை மட்டுமே இணைத்துள்ளேன். நான் கடம்பூரில் சுட்ட 100 க்கும் மேற்பட்ட படங்களை எனது ஆர்குட் தளத்தில் பார்வையிட வேண்டுகிறேன்.



Posted by ATOMYOGI at 9:19 PM 0 comments
§ எனக்கு வயது 15 இருக்கும் அது நான் 10ம் வகுப்பு படித்து வந்த நேரம். எனது தந்தை தனது ஊதியத்தில் பெரும் பாகத்தை புத்தகங்கள் வாங்கி தருவதிலேயே அதிகம் செலவிடுவார். அப்படி ஒரு நாள் எனக்கு அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட தொகுப்பு தான் கவியரசு கண்ணதாசனின் "அர்த்தமுள்ள இந்து மதம்".
§ கவியரசரை பழைய திரைப்படங்களில் பாடல் எழுதியவர் என்று மட்டுமே அறிந்து இருந்த எனக்கு "அர்த்தமுள்ள இந்து மதம்" படித்ததும் வியப்பு. வாழ்வின் அனைத்து மூலைகளையும் அனுபவித்தவர் அவர் என்பதை அர்த்தமுள்ள இந்து மதத்தின் ஒவ்வொரு எழுத்துக்களும் சுட்டிக்காட்டின.
§ கவியரசு கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் ஐந்தாம் பாகம் "ஞானம் பிறந்த கதை" படித்த பொழுது தான் சைவ கோவில்களில் கரும்புடன் நின்றிருந்த பட்டினத்தாரின் பெருமை அறிந்தேன். ஆனால் அந்த வயது அவரைப் பற்றி ஓரளவே தெரிந்துகொள்ள செய்தது.
§ காலம் தன் சிறகை யாருக்காகவும் மெதுவாக அசைப்பதில்லை. +2 முடித்து இளங்கலை பொறியியல் சேர்ந்தேன்.... அது முடித்தவுடன் முதுகலை பொறியியல். படித்தவுடன் தொலைதொடர்பு துறையில் பணி பணியில் சேருவதற்கான நியமன ஆணை இன்னும் கிடைக்கப் பெறாமையால் கடந்த காலத்தினை அசைபோடும் பொழுது, ஒருநாள் இணைய்த்திலே வலம் வரும் நேரம் எனது வகுப்பறை ஆசான் மதிப்பிற்குரிய சுப்பையா அவர்களின் http://devakottai.blogspot.com/2008/03/star-posting_5939.html பக்கத்தினுள் நுழைய நேரிட்டது.மீண்டும் என்னுள் உயிர் பெற்றது பட்டினத்தாரைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம்.
§ இனி வரும் காலங்களில் பட்டினத்தாரின் பாடல்களை உங்களுடன் சேர்த்து நானும் சுவைக்க இந்த வலைப்பக்கத்தினை பயன்ப்டுத்த விழைகிறேன். துவக்கமாக நான் முதன் முதல் படித்த பட்டினத்தார் பாட்டு
"நாப் பிளக்கப் பொய்யுரைத்து நவநிதியம் தேடி
நலனொன்று மறியாத நாரியரைக் கூடிப்
பூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போலப்
புலபுலெனக் கலகலெனப் புதல்வர்களைப் பெறுவீர்
காப்பதற்கும் வகையறியீர்; கைவிடவு மாட்டீர்
கவர்பிளந்த மரத்துளையிற் கால்நுழைத்துக் கொண்டே
ஆப்பதனை யசைத்துவிட்ட குரங்கதனைப் போல
அகப்ப்ட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே!"
§ நான் அந்த வயதில் இந்த பாட்டினை ரசிக்க காரணம் கடையிரு வரிகள்... பிறகு காலம் செல்ல செல்ல தான் மற்ற அடிகளின் பொருளை அறிந்தேன் (இன்னும் உணரவில்லை :-)) ஒரு அற்புத பாடலுடன் மீண்டும் சந்திப்போம்,........
Posted by ATOMYOGI at 12:54 PM 0 comments
Labels: 9884340123, sudhagar, ஞானப்பாடல், பட்டினத்தார் பாடல்