எண்களின் துவக்கம் 0 அல்ல 1 லிருந்து !!!!




          ராஜ்கோட்டுக்கு திரும்பி ஒரு வாரம் ஆகிறது. ஊருக்கு போன வேலையெல்லாம் சுபமாய் முடிந்தது. (வளைகாப்பு, தமிழ் செம்மொழி மாநாடு, நண்பர்களுடனான சந்திப்பு..... ) சரி! ஊரில் நடந்தவற்றை அடுத்த பதிவில் பார்போம். இப்ப மேட்டருக்கு வருவோம். நேற்று முன்தினத்திற்கு நேற்று, தூக்கம் வராத இரவில் கால்குலேட்டரை வைத்து விளையாடிக் கொண்டு இருந்தேன் அப்போது ஒரு வினோதமான ஒன்றை கவனித்தேன்.

          எந்த ஒரு எண்ணையும் 8 முறை தொடர்ந்து வர்கமூலம் (Square root) காணும் பொழுது அது 1.0 ஆகிறது. எடுத்துக்காட்டு

Number : 256

√256 = 16
√16=4
√4=2
√2=1.414
√1.414 = 1.189
√1.189 = 1.0905
√1.0905 = 1.044
√1.044 = 1.02

Number : 12345678

√12345678 = 3513.641
√3513.641 = 59.275
√59.725 = 7.69908
√7.69908 = 2.774
√2.774 = 1.665
√1.665 = 1.290
√1.2906 = 1.13
√1.13 = 1.06

          இதிலிருந்து நான் அறிந்து கொண்டது என்னவெனில் எண்களின் துவக்கம் பூஜ்ஜியம் அல்ல 1 தான். பூஜ்ஜியம் என்பது வெறும் குறியீடு மட்டுமே. (அதெல்லாம் எங்களுக்கு முன்னவே தெரியும் என்பவர்களுக்கு மேலும் ஒரு விசயம் எண்களின் துவக்கம் 1 ஆதலால் 0.5, 0.75 போன்ற மதிப்புகளும் கிடையாது எல்லாம் 1 லிருந்து தான்...... ) புரிந்தவர்கள் திட்டலாம் புரியாதவர்கள் பின்னூட்டமிடலாம்......

          அனைத்தின் மூலமும் 1 தான்.......... (டபுள் மீனிங்)

**************************************************************************************

முணுமுணுப்பது:

           காதல் வந்தாலே காலு ரெண்டும் தன்னாலே காத்தா சுத்துதே உந்தன் பின்னாலே.... (ஊருல இந்திரா கொட்டாய்ல பார்த்தேன். அய்யோ! அனுஷ்கா எவ்ளோ அழகு!!!!! )

**************************************************************************************

3 comments:

வால்பையன் said...

பூஜ்ஜியத்தின் தேவை குறித்து ராமானுஜர் ஒரு ஆர்டிக்கள் எழுதியிருகிறாராம்!
கேள்விபட்டேன், படித்தால் பகிர்ந்து கொள்கிறேன்!

ATOMYOGI said...

பூஜ்ஜியம் முக்கியமான ஒன்று தான் எண்களை அடையாளப்படுத்துவதில் அதன் பங்கு சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது. ஆனால் ஆதி அதுவல்ல என்பது என் கருத்து!!!

ATOMYOGI said...

அப்படியா! சுட்டி இருந்தால் தாருங்களேன் வால்பையன் ....

Post a Comment

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருத்தால் கீழே ஓட்டளித்து செல்லுங்கள்...