இரயில் பெண்!



அன்றொரு நாள்
கோவை விரைவுத் தொடர்வண்டியில்
எப்போதும் வாயிலின் படியில்
அமர்ந்து பயணிக்கும் நான்
அன்று பெட்டியின் நடுவில்
அவளின் விழியீர்ப்பு மையத்தில்
பிரம்மனும் தோற்றிடும் படைப்பு
பார்க்கும் பொழுதெல்லாம் செல்லரிப்பு
அவள் நாலைந்து முறை தவறுதலாக‌
சில் மைக்ரோ விநாடிகள் எனைப் பார்த்தாள்
நான் ஒரு nano விநாடியும்
தவறாமல் அவளைப் பார்த்திருந்தேன்
அது மானைப் பார்க்கும் புலியின் பார்வையல்ல‌
ஒரு பூவைப் பார்க்கும் பட்டாம்பூச்சியின் பார்வை
ஏழு மணிநேரம் கழிந்தது
நானிறங்க வேண்டிய நிறுத்தமும் வந்தது
என்னை இறக்கி விட்டு விட்டு
கேலியாய் சங்கூதிச் சென்றது ரயில்
அவளோடு என் இத‌யத்தையும் சுமந்து......

1 comments:

Anonymous said...

அருமை...!!! அருமை !!!

அவள் யென்னை கடந்து சில காலடிகள் சென்றபின் திரும்பிபார்த்து சிரிக்கும் அந்த முகத்தை பார்க்ககும் போது கிடைத்த மகிழ்ச்சி ., ஆனந்தம் ., பரவசம் நிம்மதி ., கோடி ரூபாய் சேர்த்த போதும் கிடைக்கவில்லை .,பிற பெண்களும் சம்போகம் செய்யும் கிடைக்கவில்லை ஏன் ?????

Post a Comment

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருத்தால் கீழே ஓட்டளித்து செல்லுங்கள்...