எங்கடா அவன்.. கையில கிடச்சான்னா அவ்ளோதான்...


நான் என்னோட வேலையில ரொம்ப பிஸி (?) அதனால சமீப காலமா தமிழ் படங்கள் பார்க்க முடியறது இல்ல. ரெண்டு நாளைக்கு முன்னாடி பெங்களூர் ல இருந்து ஒரு நண்பன் போன் பண்ணினான் "டேய் மச்சான்! ஒரு படம் வந்துருக்கு டா. செம சூப்பர் மச்சி. ஹாலிவுட் டச் ல இருக்கு. உனக்கு வேற அமரர் கல்கி னா பிடிக்குமே அவரோட புதினங்கள் பார்த்திபன் கனவு, பொன்னியின் செல்வன் பேஸ் பண்ணின படம் தவறாம பாரு " அப்படினு சொன்னான். (நான் அவ‌னுக்கு எந்த‌ கெடுத‌லுமே ப‌ண்ணின‌து இல்ல‌யே.. :-( )

சரி நண்பன் சொல்றானேனு நானும் எனது இடையறாத பணிகளுக்கு நடுவே டாரண்ட் உதவியால தரவிறக்கம் செய்து பார்த்தேன்.

மண்ணாங்கட்டி... கல்கியோட புதினங்களுக்கும் அந்த படத்துக்கும் ஒரு வரி கூட சம்பந்தத்தைக் காணோம். என்ன ஆச்சு செல்வ ராகவனுக்கு. நல்லா தான போய்கிட்டு இருந்துச்சு.


டைரகடர் நல்லா குழப்பி போயிருகார்னு தெளிவா தெரியுது. நல்ல கதையில இலங்கை பிரச்சனையை நுழைக்க முயற்சித்த‌து முழு படத்தையும் நசமாக்கிருச்சு. 2 நிமிடம் வேக வைக்க வேண்டிய நூடுல்ஸ 20 நிமிசம் வேக வைச்சா என்ன ஆகுமோ அப்படி ஆகியிருக்கு கதை.

அதுக்காக படம் முழுசும் வேஸ்ட்னு சொல்ல முடியாது. ஆங்காங்கே சில விசயங்கள் ரசிக்கும் படியா இருக்கு. படத்தில் ரெண்டு ஆறுதல் ஒண்ணு பார்த்திபன். தனக்கு கொடுத்த காசுக்கு மேலேயே மெனக்கெட்டு இருக்காரு ஆனா என்ன பண்றது விழலில் இறைத்த நீர். இன்னொரு ஆறுதல் ரீமா சென். ரீமா உங்களுக்கு நல்லா நடிக்கவும் வருது. மத்தபடி கேரகடர் செலக்ட் பண்றதிலேயே ராகவன் சறுக்கிட்டார்.

அந்த ராணுவ மேஜர் (அதாங்க கற்றது தமிழ் ல வர ஸ்கூல் வாத்தி) பார்க்க சரத் பொன்சேகா மாதிரியே இருக்காருங்கறதுக்காக அவரயா செலக்ட் பண்றது? சுத்தமா ஒட்டவே இல்ல.

மொத்த‌த்துல‌ க‌தையே ம‌னசுல‌ ஒட்ட‌ல‌... ஒரு ந‌ம்பிக்கைகுரிய‌ விச‌ய‌ம் என்ன‌னா ரெண்டாம் பாக‌ம் எடுக்க‌ போறாங்க‌ளாம்... ஹ்ம்ம்.. அதுல‌யாவ‌து த‌வ‌றுக‌ளை ச‌ரி செய்வீங்க‌ளா செல்வா?.........

இந்த பதிவோட தலைப்பு, என்னய அந்த படத்த பார்க்க சொன்ன அந்த பிரியமான நண்பன பற்றி மற்றவர்களிடம் விசாரிக்கும் வாசகம்..

இரயில் பெண்!



அன்றொரு நாள்
கோவை விரைவுத் தொடர்வண்டியில்
எப்போதும் வாயிலின் படியில்
அமர்ந்து பயணிக்கும் நான்
அன்று பெட்டியின் நடுவில்
அவளின் விழியீர்ப்பு மையத்தில்
பிரம்மனும் தோற்றிடும் படைப்பு
பார்க்கும் பொழுதெல்லாம் செல்லரிப்பு
அவள் நாலைந்து முறை தவறுதலாக‌
சில் மைக்ரோ விநாடிகள் எனைப் பார்த்தாள்
நான் ஒரு nano விநாடியும்
தவறாமல் அவளைப் பார்த்திருந்தேன்
அது மானைப் பார்க்கும் புலியின் பார்வையல்ல‌
ஒரு பூவைப் பார்க்கும் பட்டாம்பூச்சியின் பார்வை
ஏழு மணிநேரம் கழிந்தது
நானிறங்க வேண்டிய நிறுத்தமும் வந்தது
என்னை இறக்கி விட்டு விட்டு
கேலியாய் சங்கூதிச் சென்றது ரயில்
அவளோடு என் இத‌யத்தையும் சுமந்து......

நீ என்று தெரிந்தும்!!!




நெருப்பென்று தெரிந்தும் விட்டில்பூச்சி
நீயென்று தெரிந்தும் நான்!!!!

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்!!!!

எனது "தனி"க்குடித்தனத்தின் அழகு.....


பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்த வேண்டுகிறேன்... :‍)

மாநகரத்து மடந்தை!!!




ஒரு மாலை நேரம்
காற்றில் மழையின் ஈரம்
தெருவின் முடிவில்
களங்கலான் வெளிச்சத்தில்
களங்கமற்ற முகம்
சரியாய் பார்பதற்கு முன்
மறைந்திடும் எரிநட்சத்திரம்
போல்..............
மீண்டும் என்று வரும்
அந்த மாலை நேரம்
அதே மழையின் ஈரம்....

புரூஸ் லீ யும் புத்தமும்!



திரையில் புருஸ்லீ கற்று தரும் பத்து எளிய உண்மைகள்
ஆழ்ந்து புரிந்து கொள்ளப்பட வேண்டியவை.
1)எதிரியிடம் உன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாதே.
2)தாக்கபட வேண்டிய இடத்தை நோக்கி உன் கண்களை
நகர்த்தாதே.
3)சண்டையை எப்போதும் நீ துவக்காதே.
4)எதிலிருந்தும் உனக்கானதை கற்றுக்கொள்,
5)சண்டையிடுவதில் அவசரம் காட்டாதே
அது பலவீனமானது.
6)அடிபட்டு விழுவது தவறில்லை. அதன்
சுவடே இல்லாமல் எலாஸ்டிக் போல
உடனே எழுந்து சண்டையிடு.
7)பலம் உன் உடலில் இல்லை. மனதில் தானிருக்கிறது.
8)போராளியின் ஒரே துணை மௌனம் மட்டுமே.
9)தன்னை வெளிப்படுத்திக் கொள்வதே கலை.
10) மூச்சை உற்று நோக்கி பழகு. சீராக்கு.
சண்டையிடுவதற்கு அதுவே ஆதாரம்.

நன்றி:http://sramakrishnan.com/view.asp?id=331&PS=1

மீள்சந்திப்பு




மழை நின்ற பிறகும்
நிலைத்திருக்கும் ஈரமாய்
பிரிந்த பிறகும் நமது......

End of the every rain
Gives happy of its pleasure
Leaves longing for next arrival
Like.... US.....

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருத்தால் கீழே ஓட்டளித்து செல்லுங்கள்...