வெள்ளியங்கிரி பயணம்


          09/09/2011. அந்த அழகிய நாளின் அதிகாலை 4.30 மணியளவில் நானும் எனது நண்பர் திரு. கேபிள் சுரேஷ் ம் பஜாஜ் பல்சர் ல் 500 ரூபாய்க்கு எரிபொருள் நிரப்பிக் கொண்டு கோபிச்செட்டிபாளையத்தில் இருந்து கிளம்பினோம். அங்கிருந்து சத்தியமங்கலம், புளியம்பட்டி, அன்னூர், சரவணம்பட்டி வழியாக கோவையை அடைந்தோம். அங்கிருந்து பூண்டி மலையடிவாரத்தை காலை 7.30 மணியளவில் சென்று அடைந்தோம். ஒரு உணவகத்தில் ஊத்தாப்பத்தை சாப்பிட்டு விட்டு, அடிவாரக் கோயிலில் சாமி கும்பிட்டு விட்டு மலையேறத் தொடங்கினோம். இது சீசன் இல்லாத காரணத்தினால், எங்களுக்கு மலையேற உதவியாக இருக்கும் மூங்கில் தடியினை தர மறுத்து விட்டனர் கோயில் நிர்வாகத்தினர்.

          ஆனால், போகும் வழியிலேயே இரண்டு மூங்கில் குச்சிகள் எங்களுக்கு உதவத் தயாராக இருந்தன. அவற்றை எடுத்துக் கொண்டு 8.30 மணிக்கு மலையினை ஏறத் தொடங்கினோம்.




           சுமார் 2500 படிக்கட்டுகளை கடந்த பின், 9.45 மணியளவில், முதல் மலையின் உச்சியினை அடைந்தோம்.வெள்ளை விநாயகர் கோயிலில் விநாயகரை தரிசித்து விட்டு, ஏறத் தொடங்கினோம். அதன் பின் மலைப் பாதையில் படிக்கட்டுகள் இல்லை. சறுக்கலான, மண் பாதையில் தொடர்ந்து ஏறினோம்.








          அந்த மலைக் காட்டின் அழகையும், அமைதியையும் ரசித்து விட்டு, தொடர்ந்து இரண்டாபது மலையின் உச்சியினை நோக்கி நடந்தோம். உடல் சக்தியினை கொஞ்சம் கொஞ்சமாக இழக்க ஆரம்பித்தோம். 11.00 மணியளவில் இரண்டாவது மலையுச்சியை அடைந்தோம். சிறிது நேர ஓய்வுக்குப் பின், மதியம் 12.30 மணியளவில் கொண்டு வந்திருந்த உணவை சாப்பிட்டு விட்டு, பயணத்தை தொடர்ந்தோம். 1.50 மணியளவில் மூன்றாவது மலையின் உச்சியினை அடைந்தோம். இதமான சாரல் மழை எங்களை வரவேற்க்க காத்திருந்தது.








          தொடர்ந்து பயணித்தோம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பசுமையான காட்டு மரங்கள் மனதைக் கவர்ந்தன. சுமார் 2.50 மணிக்கு நான்காம் மலையின் உச்சியினை அடைந்தோம். கண்ணில் பட்ட காட்டெருமையை பயத்துடன் ரசித்து விட்டு வழுக்கலான, சறுக்கும் பாதையில், முயர்ச்சித்து மூங்கில் குச்சின் உதவியோடு ஏறினோம்.
          3.10 மணியளவில் ஐந்தாவது மலையின் உச்சியை அடைந்தோம். மேகங்கள் தொட்டு செல்லும் அந்த இதமான அனுபவம் மறக்க முடியாத ஒன்று. மேகங்களோடு பயணித்து ஆறாம் மலையை சுமார் 3.50 மணிக்கு அடைந்தோம்.










          ஆகாய லிங்கத்தை தரிசிக்க இன்னும் ஒரு மலை ஏற வேண்டும். தொடர்ந்து பயணித்தோம். மாலை 4.30 மணியளவில் ஏழாவது மலையின் உச்சியை அடைந்தோம். மேகங்கள் கண்களை மறைத்தன.








          அந்த அழகிய, அமைதியான உச்சியில், சிறு குகைக்குள்ளே அமைந்திருக்கும் கோயிலில் சிறிது நேரம் தியானித்தோம். அழகிய அந்த இடத்தை விட்டு புறப்பட தயாரானோம். அப்போதே இருளத் தொடங்கி விட்டது. மழையும், இருளும் கை கோர்த்திருந்தன.





          வேகமாக இறங்கத் தொடங்கினோம். இறங்குவது கொஞ்சம் சுலபமாகவே இருந்தது. இரவு சுமார் 8.30 மணிக்கு அடிவாரத்தை அடைந்து, ஒரு அழகிய அனுபவத்தின் நினைவுகளுடன் வீட்டுக்கு புறப்பட்டோம். பயணம் இனிதாக முடிந்தது, லேசான கால் வலியுடன்... :-)


*****************************************************************************
இந் நேரத்தில் ஒரு திரைப்படப் பாடலை பகிர விரும்புகிறேன்.

*******************************************************************************


நான் அரக்கன்!



கடவுள் தன்மை அற்றவன் அரக்கன்


எதிரியை மறைந்து நின்று கொல்லும்
தெய்வத்தன்மை இல்லாத நான் அரக்கனே!

துணைவியை சந்தேகம் கொள்ளும்
தெய்வத்தன்மை இல்லாத நான் அரக்கனே!

சூழ்ச்சியால் சமர் வெல்லும்
தெய்வத்தன்மை இல்லாத நான் அரக்கனே!

தவம் செய்பவனுக்கு மட்டும் வரம் என்ற
தெய்வத்தன்மை இல்லாத நான் அரக்கனே!

கள்ளும் சுருட்டும் கேட்கும்
தெய்வத்தன்மை இல்லாத நான் அரக்கனே!

ஆயிரம் பெண்களுடன் ஒரே நேரத்தில் கூத்தடிக்கும்
தெய்வத்தன்மை இல்லாத நான் அரக்கனே!

கேட்பவருக்கு மட்டும் உதவும்
சித்தத்தன்மை இல்லாத நான் அரக்கனே!

இத்தனைக்குப் பிறகும் இறைவனை நம்பும் நான்
அரக்கனே!

மத்திய பாரத பயணம் !!!


          
செப்டம்பர் 27 முதல் நவம்பர் 4 வரை Phase-II Training மத்திய பிரதேசத்து ஜபல்பூரில் அளிக்கப்பட்டது. மத்திய இந்தியாவின் ராணுவ பயிற்சி மற்றும் தலைமையகம் அமைந்துள்ள அதே வளாகத்தில் தான்....

          மத்திய பிரதேசம் இயற்கை அன்னையின் அன்பையும் அரவணைப்பையும் முழுதும் பெற்ற மாநிலம். ஒவ்வொரு வாரமும் ஏதேனும் ஒரு சுற்றுலா அல்லது இயற்கை பிரதேசங்களுக்கு சென்றோம். அங்கு நான் அனுபவித்ததை, ரசித்ததை இனி பகிரப் போகிறேன்.

           Training ன் முதல் வார சனிக்கிழமை மகாத்மா காந்தி பிறந்ததனால் விடுமுறையாக அமைந்தது. வெள்ளியன்று இரவே ஒரு Tavera வில் நாங்கள் பத்து பேர் சித்திரக்கூடம், மற்றும் கஜூராஹோ நோக்கி கிளம்பினோம்.



          அதிகாலை 4:30 மணிக்கு சித்திரக்கூடம் அடைந்தோம். கிடைத்த ஒரு தர்மசாலையில் 3 மணிநேரத்தை தூங்கி கழித்தோம். 8:30 மணியளவில் காலை குளியல் மந்தாகினி ஆற்றில்.....





**************************************************************************************
முணுமுணுப்பது:

          இந்த பயணங்களின் போது வாகனத்தில் இசைத்த என்னை அசைத்த பாடல்ளில் ஒன்று கீழே!!


**************************************************************************************


அடுத்து வருவது! கஜூரஹோ பயணம்... (புகைப்படங்களுடன்)


*************************************************************************************

காற்றும் என் காதலும்!!

கண்ணால் காண முடியாததால்
காற்று இல்லை என்பதில்லை
நான் சொல்லாததால்
எனக்குள் இல்லை என்றில்லை!!!

எண்களின் துவக்கம் 0 அல்ல 1 லிருந்து !!!!




          ராஜ்கோட்டுக்கு திரும்பி ஒரு வாரம் ஆகிறது. ஊருக்கு போன வேலையெல்லாம் சுபமாய் முடிந்தது. (வளைகாப்பு, தமிழ் செம்மொழி மாநாடு, நண்பர்களுடனான சந்திப்பு..... ) சரி! ஊரில் நடந்தவற்றை அடுத்த பதிவில் பார்போம். இப்ப மேட்டருக்கு வருவோம். நேற்று முன்தினத்திற்கு நேற்று, தூக்கம் வராத இரவில் கால்குலேட்டரை வைத்து விளையாடிக் கொண்டு இருந்தேன் அப்போது ஒரு வினோதமான ஒன்றை கவனித்தேன்.

          எந்த ஒரு எண்ணையும் 8 முறை தொடர்ந்து வர்கமூலம் (Square root) காணும் பொழுது அது 1.0 ஆகிறது. எடுத்துக்காட்டு

Number : 256

√256 = 16
√16=4
√4=2
√2=1.414
√1.414 = 1.189
√1.189 = 1.0905
√1.0905 = 1.044
√1.044 = 1.02

Number : 12345678

√12345678 = 3513.641
√3513.641 = 59.275
√59.725 = 7.69908
√7.69908 = 2.774
√2.774 = 1.665
√1.665 = 1.290
√1.2906 = 1.13
√1.13 = 1.06

          இதிலிருந்து நான் அறிந்து கொண்டது என்னவெனில் எண்களின் துவக்கம் பூஜ்ஜியம் அல்ல 1 தான். பூஜ்ஜியம் என்பது வெறும் குறியீடு மட்டுமே. (அதெல்லாம் எங்களுக்கு முன்னவே தெரியும் என்பவர்களுக்கு மேலும் ஒரு விசயம் எண்களின் துவக்கம் 1 ஆதலால் 0.5, 0.75 போன்ற மதிப்புகளும் கிடையாது எல்லாம் 1 லிருந்து தான்...... ) புரிந்தவர்கள் திட்டலாம் புரியாதவர்கள் பின்னூட்டமிடலாம்......

          அனைத்தின் மூலமும் 1 தான்.......... (டபுள் மீனிங்)

**************************************************************************************

முணுமுணுப்பது:

           காதல் வந்தாலே காலு ரெண்டும் தன்னாலே காத்தா சுத்துதே உந்தன் பின்னாலே.... (ஊருல இந்திரா கொட்டாய்ல பார்த்தேன். அய்யோ! அனுஷ்கா எவ்ளோ அழகு!!!!! )

**************************************************************************************

உஷார்! உஷார் !



          இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் வரும் 17 ம் தேதி எனது அண்ணி அவர்களின் வளைகாப்பு.
          அதை முன்னிட்டு மதிப்பிற்குரிய மாயாவி அவர்கள் (யாருப்பா அங்க சிரிக்கறது?....) ஊருக்கு கிளம்புகிறார். ஜூலை 4 ம் தேதி தான் ராஜ்கோட் திரும்புவார்.
*************************************************************************************

அறிந்து கொள்ள: (இது என்னோடதல்ல....)

List of 64 arts /அறுபத்துநாலு கலைகள்



          அறுபத்துநாலுகலைகளின் பட்டியலை மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் தொகுத்த செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி (A Comprehensive Etymological Dictionary of the Tamil Language )Vol. 1 , Part - 1 பக்கம் 545-548 வரையிலும் கண்டுள்ளபடி இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது.. தெரிந்துகொள்ளுங்கள்.

          அறுபத்துநாலுகலை (பெ.) `காமசூத்திரம்' என்னும் பழைய சமற்கிருத நூலிற் சொல்லப்பட்டுள்ள அறுபத்துநான்கு கலைகளும் அறிவியல்களும்.

அறுபத்து நாலு கலைகளாவன:

1. எழுத்திலக்கணம் (அக்கரவிலக்கணம்);
2. எழுத்தாற்றல் (லிகிதம்);
3. கணிதம்;
4. மறைநூல் (வேதம்);
5. தொன்மம் (புராணம்);
6. இலக்கணம் (வியாகரணம்);
7. நயனூல் (நீதி சாத்திரம்);
8. கணியம் (சோதிட சாத்திரம்);
9. அறநூல் (தரும சாத்திரம்);
10. ஓகநூல் (யோக சாத்திரம்);
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்);
12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்);
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்);
14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்);
15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்);
16. மறவனப்பு (இதிகாசம்);
17. வனப்பு;
18. அணிநூல் (அலங்காரம்);
19. மதுரமொழிவு (மதுரபாடணம்);
20. நாடகம்;
21. நடம்;
22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்);
23. யாழ் (வீணை);
24. குழல்;
25. மதங்கம் (மிருதங்கம்);
26. தாளம்;
27. விற்பயிற்சி (அத்திரவித்தை);
28. பொன் நோட்டம் (கனக பரீட்சை);
29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை);
30. யானையேற்றம் (கச பரீட்சை);
31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை);
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை);
33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை);
34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்);
35. மல்லம் (மல்ல யுத்தம்);
36. கவர்ச்சி (ஆகருடணம்);
37. ஓட்டுகை (உச்சாடணம்);
38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்);
39. காமநூல் (மதன சாத்திரம்);
40. மயக்குநூல் (மோகனம்);
41. வசியம் (வசீகரணம்);
42. இதளியம் (ரசவாதம்);
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்);
44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்);
45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்);
46. நாடிப்பயிற்சி (தாது வாதம்);
47. கலுழம் (காருடம்);
48. இழப்பறிகை (நட்டம்);
49. மறைத்ததையறிதல் (முஷ்டி);
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்);
51. வான்செலவு (ஆகாய கமனம்);
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்);
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்);
54. மாயச்செய்கை (இந்திரசாலம்);
55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்);
56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்);
57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்);
58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்);
59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்);
60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்);
61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்);
62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்);
63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்);
64 சூனியம் (அவத்தைப் பிரயோகம்).

வேறொரு பட்டியல்

1. பாட்டு (கீதம்);
2. இன்னியம் (வாத்தியம்);
3. நடம் (நிருத்தம்);
4. ஓவியம்;
5. இலைப்பொட்டுக் (பத்திர திலகம்) கத்தரிக்கை;
6. பல்வகை யரிசி பூக்களாற் கோலம் வைத்தல்;
7. பூவமளியமைக்கை;
8. ஆடையுடை பற்களுக்கு வண்ணமமைக்கை;
9. பள்ளியறையிலும் குடிப்பறையிலும் மணி பதிக்கை;
10. படுக்கையமைக்கை;
11. நீரலை அல்லது நீர்க்கிண்ண இசை (ஜலதரங்கம்);
12. நீர்வாரி யடிக்கை;
13. உள்வரி (வேடங்கொள்கை);
14. மாலைதொடுக்கை;
15. மாலை முதலியன் அணிகை;
16. ஆடையணிகளாற் சுவடிக்கை;
17. சங்கு முதலியவற்றாற் காதணியமக்கை;
18. விரை கூட்டுகை;
19. அணிகலன் புனைகை;
20. மாயச்செய்கை (இந்திரசாலம்);
21. குசுமாரரின் காமநூல் நெறி (கௌசுமாரம்);
22.கைவிரைவு (ஹஸ்தலாவகம்);
23. மடைநூலறிவு (பாகசாத்திர வுணர்ச்சி);
24. தையல்வேலை;
25. நூல்கொண்டு காட்டும் வேடிக்கை;
26. வீணை யுடுக்கைப் பயிற்சி (வீணை டமருகப் பயிற்சி);
27. விடுகதை (பிரேளிகை);
28. ஈற்றெழுத்துப் பாப் பாடுகை;
29. நெருட்டுச் சொற்றொடரமக்கை;
30. சுவைத்தோன்றப் பண்ணுடன் வசிக்கை;
31. நாடகம் உரைநடை (வசனம்) யிவற்றினுணர்ச்சி;
32. குறித்தபடி பாடுகை (ஸமஸ்யாபூரணம்);
33. பிரம்பு முத்தலியவற்றாற் கட்டில் பின்னுதல்;
34. கதிரில் நூல் சுற்றுகை;
35. மரவேலை;
36. மனைநூல் (வாஸ்து வித்தை);
37. காசு, மணி நோட்டம் (நாணய ரத்னங்களின் பரிசோதனை);
38. நாடிப்பயிற்சி (தாதுவாதம்);
39. மணிக்கு நிறமமைக்கையும் மணியின் பிறப்பிட மறிகையும்;
40. தோட்டவேலை;
41. தகர்ப்போர் சேவற்போர் முதலிய விலங்கு பறவைப்போர்;
42. கிளி நாகணங்கட்குப் பேச்சுப் பயிற்றுவகை;
43. உடம்பு பிடிக்கையும் எண்ணைய் தேய்க்கையும்;
44. குழூவுக்குறி (சங்கேதாக்ஷரங்களமத்துப் பேசுகை);
45. மருமமொழி (ரகசிய பாஷை);
46. நாட்டுமொழி யறிவு (தெசபாஷை யுணர்ச்சி);
47. பூத்தேர் (புஷ்பரதம்) அமக்கை;
48. முற்குறி (நிமித்தம்) அமைக்கை;
49. பொறியமைக்கை;
50. ஒருகாலிற் கொள்கை (ஏகசந்தக்கிராகித்வம்);
51. இருகாலிற் கொள்கை (துவிசந்தக்கிராகித்வம்);
52. பிதிர்ப்பா (கவி) விடுக்கை;
53. வனப்பு (காவியம்) இயற்றுகை;
54. உரிச்சொல்லறிவு (நிகண்டுணர்ச்சி);
55. யாப்பறிவு;
56. அணியறிவு (அலங்காரவுணர்ச்சி);
57. மாயக்கலை (சாலவித்தை);
58. ஆடையணியுந் திறமை (உடுத்தலிற் சாமர்த்தியம்);
59. சூதாட்டம்;
60. சொக்கட்டான்;
61. பாவை (பொம்மை), பந்து முதலியன வைத்தாடுகை;
62. யானயேற்றம், குதிரையேற்றம் பயிற்சி;
63. படக்கலப் பயிற்சி;
64. உடற் (தேகப்) பயிற்சி (சது.).

நன்றி: http://tamilelibrary.org/teli/arts.html

*************************************************************************************

சிந்திக்க:
           ஏற்ற காலம் கடந்த பின் பயணம் துவங்கும் கப்பல் புயலில் சிக்கித்தான் போகும்.
- அனுபவம்.

*************************************************************************************

உலகத்தமிழ் செம்மொழி மாநாடு!!!

பாடல்:






          இந்த பாடலில் we were warned!!!!!! என்ற வரிகள் எதற்கு காண்பிக்கப்படுகின்றன என்று யாருக்காவது தெரியுமா? () தெரிஞ்சா பின்னுட்ட்டதில சொல்லுங்கோ!!!!!!!

           தரவிறக்க வேண்டுவோர் இந்த சுட்டியை பயன்படுத்துங்கள்.


          உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டின் அதிகாரப்பூர்வ தளத்திற்கு செல்ல இங்கே சொடுக்கவும்.

********************************************************************************************
சிந்திக்க:
           அழகான ஒருத்தி தான் தனக்கு மனைவியாய் வர வேண்டுமென்று ஆணோ அல்லது அழகான ஒருவன் தான் தனக்கு கணவனாய் வர வேண்டுமென்று பெண்ணோ நினைத்தால், உலகில் 95 சதவிதத்தினர் முதிர் கண்ணன்களாவோ அல்லது முதிர்கன்னிகளாகவோ வாழ வேண்டி இருக்கும்.

                                         - நாங்களும் கருத்து சொல்வோம்ல......

********************************************************************************************

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருத்தால் கீழே ஓட்டளித்து செல்லுங்கள்...