குஜராத்தி கற்று வருகிறேன்!

வணக்கம் நண்பர்களே! பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் இல் தேர்வு எழுதி பாஸ் செய்வது கூட எளிது ஆனால் தேர்ச்சி பெற்ற பிறகு இருக்கும் நடைமுறைகள் அப்பப்பா............ ஒரு வழியாக அனைத்து முறைகளையும் முடித்து விட்டேன்... கடந்த ஒரு மாதமாய் அதனால் தான் புதிய பதிவொன்றையும் போடவில்லை...BSNL என்னை குறைந்த பட்சம் 5 மாத்ங்களுக்காவது குஜாராத்தில் (காந்தி பிறந்த மண்!!!!!) பணி புரிய ஆணையிட்டு இருக்கிறது... ஆகவே 30 நாட்களில் குஜாரத்து கற்றுக் கொள்வது எப்படி? வாங்கி விட்டேன்.... இன்னும் ஒரு மாதத்தில் குஜராத்தியில் எனது பெயரையாவது எழுதுவேன்....

வேலை(ள‌) வந்துடுச்சு...............இந்த குரு பெயர்ச்சி யாருக்கு கொடுமையைத் தரும்?.... சந்தேகமே வேண்டாம் BSNL நிறுவனத்திற்கு தான்.... ஆமாம்... நான் BSNL-JTO ஆக தேர்வாகி உள்ளேன்... எனக்கு பாராட்டுகள் பிடிக்காது.... (கீழே பின்னூட்டமிட மறக்காதீர்கள்) :-)

வணக்கம் செய்திகள் வாசிப்பது........... 
 இந்த வார துவக்கத்தில் எனக்கு doordharsan-pothigai ல் தமிழ் செய்தி வாசிப்பாளர் 
பணிக்கு நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டு இருந்தேன்... (யாரும் பயப்பட 
தேவையில்லை உங்கள் விருப்பம் போலவே நான் தேர்வாகவில்லை). 
பாவம் என்னை நேர்முகம் செய்தவர்கள் நொந்து போய்விட்டார்கள். 
இதோ எனது செய்தி வாசிக்கச் சென்ற அனுபவம்.... 
20,அக்டோபர்,2008: 
       நேர்முக தேர்வு 10 மணிக்கு என்று குறிப்ப்ட்டு இருந்தார்க்ள். நானும் 
வழக்கம் போல8 மணிக்கே நிலையத்துக்கு சென்று விட்டேன்.(நாங்க எப்பவுமே 
எதுனாலும் முன்னடி போய்டுவோம். வகுப்பறை தவிர‌) என்னுடன் போட்டியிட
 வந்தவர்கள் எல்லாம் B.A, (தமிழ்,ஆங்கிலம்,வரலாறு, மற்றும் இத்தியாத்திகள்) 
படித்தவர்கள் நானொருவன் மட்டும் தான் பொறியியல் (நன்றாக உச்சரிக்கவும் 
அது பொறியல் இல்லை) அதுவும் M.E.......
       அர‌சாங்க வழக்கப்படி 10 மணிக்கு ஆரம்பமாக வேண்டிய நேர்முகம் 12 
 மணியளவில் தான் துவங்கியது. நான் நானகவதாக அழைக்கப்பட்டதாக 
ஞாபகம். தமிழ் செய்தி வாசிப்பாளருக்கான முக்கிய தகுதியான மீசை 
என்னிடம் missing  அப்பவே நடுவர் குழுவிலிருந்த ஐவரின் மீசைகளும் 
சுருங்கியது. சரி மற்ற சுற்றுகளிலாவது இவன் தேருவானா என பார்க்க 
வினாக்களைத் தொடுத்தார்கள். உரையாடல் முழுதாக நினைவில்லை 
நினைவில் இருப்பதை தருகிறேன்.
 நடுவர் குழு:உங்கள் பெயர் என்ன? (அவரது கையில் எனது தன்விபரம்
 (biodata) இருந்தது இருந்தும் கேட்டார்.) 
 நான்: (அப்பாவியாய்) சுதாகர். நடுவர் குழு: உங்களுக்கு 
ஏன் இந்த பெயர் வைத்தார்கள்
 நான் : எனது அண்ணன் பெயர் சுரேஷ். சுரேஷ் என்றால் இந்திரன்
 சுதாகர் என்றால் சந்திரன். அதனால் எனக்கு வைத்து இருப்பார்கள்
 என நினைக்கிறேன். 
நடுவர் குழு: ஒரு பலத்த சிரிப்பு....... 
நான்: (என் பெயர் விளக்கம் அவ்வளவு comedy ஆகவா இருக்கு)... 
நடுவர் குழு: நீங்க படித்ததற்கும் இந்த பணிக்கும் தொடர்பே இல்லையே
 ஏன் விண்ணப்பித்தீர்கள்
நான்: சார்! ஒவ்வொருத்தருக்கும் செய்திகள்ல தங்கள் முகம் வரவேண்டும்னு 
நினைப்பாங்க ஆனா செய்தி வாசிப்பாளாரா போன தினமும் செய்தில வரலாமே...
 அதான் 
நடுவர் குழு: உங்க கிட்ட கொடுத்த பேப்பர் ல் இருக்கிறத படிங்க.. 
நான்: பழனியில் இன்று தைபூசம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. 
அமைச்சர் பரிதி இளம்வழுதி அனைவருக்கும் பஞ்சாமிர்தம் வழங்கினார்.............
 விழாவில் rajabakshe, A B Bharathan, Atanasio Monserratta, Azar Mahmod Quarshi
 கலந்து கொண்டனர். 
         இதை எனக்குரிய இயல்பான நடையில் படித்தேன். என்னை பற்றி 
தெரிந்தவர்களுக்கு நன்கு தெரியும் நான் வேகமாக பேசுபவன் என்று. 
நடுவர் குழு: ஏன் இவ்வளவு வேகமா படிக்கிறீங்க.இப்படி நீங்க படிக்கிறது 
என்னைக்காவது உங்களுக்கு புரிங்சு இருக்கா
நான்: நான் படிக்கிறதை இது வரைக்கும் நான் கேட்டது இல்ல சார். 
நடுவர் குழு: (கொஞ்சம் சூடாக) திரும்ப ஒரு முறை மெதுவா படிங்க. 
நான்: மெதுவாக படித்தேன்.... 
நடுவர் குழு: திருவீழிமிழலை சொல்லுங்க‌ 
நான்: திருவீழிமிழலை (சரியாக உச்சரித்தேன் என்று தான் நினைக்கிறேன்) 
நடுவர் குழு: முக்கனிகள் எவை
நான் : (விதியை நொந்து கொண்டே) மா, பலா, வாழை 
நடுவர் குழு: நீங்க கண்ணாடி போட்டுட்டு தான் படிப்பீங்களா
நான்: ஆமாம். 

நடுவர் குழு: பவர் கிளாசா
நான்: ஆமாம் சார்.. 4.25,3.25 
நடுவர் குழு: (உதட்டை பிதுக்கியபடி) பவர் கிளாஸ் போட்ட ஓவர கிளார் வரும்பா?
நடுவர் குழு: கண்ணடி இல்லாம உங்களால படிக்க முடியுமா
நான் : அது படிக்க வேண்டிய பகுதி இருக்கும் தூரத்தைப் பொறுத்தது. 
நடுவர் குழு: சுமார் 10 மீட்டர் இருக்கும். 
நான் : அது எழுத்தின் சைஸ் பொறுத்தது சார். 
நடுவர் குழு: (கடுப்பாக) சாதாரணமா தான் இருக்கும்
நான்: முடியாது சார்... 
நடுவர் குழு: ........... 
நான்: சார்ஸ்.... நான் தகுதியில்லதவன் என்று தெரிந்தால் 
அந்த நிமிடமே சொல்லி விடுங்கள் எதற்கு உங்கள் நேரத்தையும் 
எனது நேரத்தையும் வீணாக்க வேண்டும்.
<நான் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்பு சுத்தாமாக குறைந்ந்தது
நடுவர் குழு: இன்னும் கேள்விகள் இருக்குப்பா... கொஞ்சம் பொறுமையா இரு.. 
நான்: ம்ம்ம்... கேளுங்க சார். 
நடுவர் குழு: நீங்க எந்த மாவட்டம்
நான் : ஈரோடு சார்... 
நடுவர் குழு: உங்கள் மாவட்டத்தின் சிறப்பு
நான்: (உங்கள் அனைவருக்கும் தான் தெரியுமே எங்கள் மாவட்ட சிறப்பு
 எல்லம் அது அத்தனையும் சொன்னேன்....)
நடுவர் குழு: நல்லது.. நீங்கள் வெளியே காத்திருங்கள்….
நான் : தேங்க்யூ சார்ஸ்.....
மேலே கண்ட உரையாடலை படிக்கும் பொழுதே தெரிகிறதல்வா நான் தேர்வாகி 
இருக்கமாட்டேன் என்று. அதனால் தான் நானும் முடிவுகளுக்காக காத்திருக்காமல்
 உடனே நிலையத்தினை விட்டு கிளம்பி 10 நிமிட நடை தூரத்தில் இருந்த 
மெரினா கடற்கரைக்கு போனேன். அங்கு நான் கண்டவற்றை
 எனது ரசனை பகுதியில் இடுகிறேன் பார்த்து பின்னூட்டமிடுங்கள். 
தவறாமல் எனது செய்தி வாசிக்கச் சென்ற இந்த இடுகையை பற்றியும் 
பின்னூட்டமிடுங்கள். நன்றி...

அருட்பெருஞ்சோதி வள்ளலார்


இன்று அக்டோபர் 5‍ ந் தேதி, அருட்பெருஞ்சோதி வள்ளலார் பிறந்த நாள். 1823 ம் ஆண்டு இதே நாள் அதாவது சுபானு ஆண்டு புரட்டாசி மாதம் 21 ந் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வளர்பிறை சித்தரை நட்சத்திரம் 4 ம் பாதத்தில் மாலை 5:54 மணிக்கு பிறந்தார் வள்ளலார் என்று அழைக்கப்படும் சிதம்பரம் ராமலிங்கம்...  
வள்ளலார் தனது கையெழுத்தைப் போடும்போதெல்லாம் சிதம்பரம் ராமலிங்கம் என்றே கையெழுத்திடுவார். ஆன்மாவின் இருப்பிடம் ஆகாய பெருவெளியாகிய சிதம்பரம் என்னும் வெட்ட வெளி என்பதை ஞானத்தால் உணர்ந்தே அவர் கையெழுத்துப் போட்டுள்ளார். அவர் 5 மாத குழந்தையாக இருந்தபோதே சிதம்பர ரகசியத்தை இறைவன் வெட்ட வெளியாகக்காட்டினான் என்பதை அவர் பாடல்கள் மூலம் விளக்கி உள்ளார்.  
வள்ளலார் சுத்த தேகம்,பிரணவ தேகம், ஞான தேகம் என்னும் 3 வகை தேகசித்தியைப் பெற்றவர். தேக சித்தி பெற்ற உடம்புகள் நிலத்தில் வீழாது அவை வெளியாய் அருளில் கலக்கும். அவர்களுக்கு இனி பிறப்பு இல்லை. இந்த பிறவியில் பெற்றதே இறுதி தேகம். அப்படி நித்திய தேகம் பெற்ற வள்ளலார் 1874 சனவரி 30 வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு சித்தி வளாக மாளிகையில் உள்ள தனது அறையில் சோதியுடன் கலந்து அருட்பெருஞ்சோதியானார். 

அவரது சமரச சுத்த சன்மார்க கொள்கைகளுள் சில,  
* கடவுள் ஒருவரே, அவரை உண்மை அன்பால் ஒளிவடிவில் வழிபட வேண்டும்.  
* சிறு தெய்வ வழிபாடு கூடாது. அந்த தெய்வங்களின் பெயரால் உயிர்பலி கூடாது.  
*புலால் உண்ணக்கூடாது.  
*சாதி,சமயம்,மதம் என்று எந்த வேறுபாடுகளும் கூடாது.  
*ஆன்மநேய ஒருமைப்பாடு உரிமையை கடைபிடிக்க வேண்டும்.  
*ஏழைகளின் பசி தவிர்த்தலாகிய சீவகாருண்ய ஒழுக்கமே 
பேரின்ப வீட்டின் திறவுகோல்.  
*புராணங்களும்,சாத்திரங்களும் வாழ்க்கைக்கு வேண்டிய முடிவான உண்மையை தெரிவிக்க மாட்டது.  
*இறந்தவரை புதைக்க வேண்டும். எரிக்க கூடாது.  
*கருமாதி, திதி முதலிய சடங்குகள் கூடாது.  
*எந்த காரியத்திலும் பொது நோக்கம் வேண்டும்.

நன்றி: தினத்தந்தி

இர‌வு நேர‌த்தில் இப்ப‌டியும் ஒரு கொள்ளை!!!


ஜெனிவாவில் முடுக்கி விடப்பட்டு இருக்கும் அந்த துகள்கள் மோதி ஆய்வு முடிவுகள் வெளி வரும் வரை நாம் சற்று பொறுமை காப்போம். அதுவரை சில பொதுவான விசயங்களைப் பற்றி பார்ப்போம்.....

நேற்று இரவு சுமார் 2 மணி இருக்கும் தீடீரென்று என் கைப்பேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வந்ததற்கு அடையாளமாய் ஒலி வந்தது, இந்த நேரத்தில் யாராக இருக்கும் என்று பார்த்தேன். நான் பயன்படுத்தும் வோடாபோன் சேவைச் செய்தி வந்துஇருந்தது. திறந்து பார்த்தால் "தாங்கள் சந்தோஸ் சுப்பரமணியத்தில் இருந்து பாடல் ஒன்றை உங்களின் அழைப்பவர் கேட்க்கும் பாடலாக தேர்வு செய்தமைக்கு நன்றி." என்று சொல்லி 35 ரூபாயை கழித்து இருந்தார்கள்.

நடு இரவில் வந்ததே எனக்கு கோபம். உடனடியாக வோடபோன் நுகர்வோர் சேவைக்கு அழைத்து கேட்டால்,5 நிமிடத்திற்கு முன் எனக்கு ஒரு தானியங்கி சேவை அழைப்பு வந்ததாகவும் அதன் மூலமாக‌ நான் தான் அந்த பாடலை தேர்ந்தெடுத்தாக கூறி சாதித்தே விட்டனர். ஆனால் அப்படி எந்த அழைப்பும் எனக்கு வரவே இல்லை.

இதற்கு எல்லாம் என்ன காரணம் தேவை இல்லாமல் வரும் சேவை அழைப்புகள் என் கண்டு கொண்டு அப்பொழுதே எனது எண்ணை START DND என குறுந்தகவல் ஒன்றை அவர்கள் கூறிய எண்ணுக்கு அனுப்பி வைத்தேன். இன்னும் 45 நாட்களில் இது போன்ற சேவை அழைப்புகள் வருவது முற்றிலும் நின்று போகும் என தகவல் வந்தது. இருந்தும் 35 ரூபாய் வீணாய் போனதே...

ஆகவே நண்பர்களே! தாங்களும் தங்கள் எண்களை Dont Disturb பட்டியலில் இணைத்து விட்டீர்கள் என்றால் தாங்களும் இது போன்ற தானியங்கு அழைப்புகளில் இருந்தும் வங்கிகளில் இருந்து வரும் கடன் அட்டை அழைப்புகளி இருந்தும் தப்பித்துக்கொள்ளலாம். இணையம் வழியாகவும் தொந்தரவு செய்யாதே பட்டியலில் நமது எண்ணை இணைக்க அரசு இணையதளம் ஒன்றையும் ஏற்படுத்தியுள்ளது.

இதோ அத‌ற்கான சுட்டி http://www.donotdisturb.in/

பொறுமைக்கு நன்றி!
தோழர்களே! எனது பகுத்தறிவிற்க்கு எல்லை காணும் பயணத்தில் நீங்களும் என்னுடன்
சேர்ந்து பயணிக்க,கருத்துக்களை தெரிவிக்க வேண்டுகிறேன்.
நமது இந்த பயணத்திற்கு உதவிடும் வகையில் ஜெனிவா வில் செயற்கை பெரு வெடிப்பு சோதனை நிகழ்ந்து கொண்டு இருக்கிறது.

தேர்வை முன்னிட்டு........

வணக்கம் நண்பர்களே! DRDO தேர்வை முன்னிட்டு நான் சென்னை செல்ல வேண்டி உள்ளதாலும், அடுத்த பதிவு சிறப்பாக அமைய நன்கு தயார் செய்ய வேண்டி இருப்பதாலும்... தளத்தில் இனி வரும் 5 நாட்களுக்கும் எந்த புது பதிவுகளும் பதிப்பிக்க பட மாட்டாது.

பழைய பதிவினை படித்து பின்னூட்டம் இட வேண்டுகிறேன்.

பகுத்தறிவு என்னும் சாத்தான்

" பகுத்தறிவு நமக்கு தந்து இருப்பதெல்லாம் அச்சமும், குழப்பமும் தான் "
என்ன உளறுகிறாய் ! மனிதன் அன்று கண்ட அக்னியில் இருந்து இன்று கண்ட அணுஉலை வரை அனைத்தும் பகுத்தறிவின் படைப்புகள் தானே? என்று நீங்கள் கேட்பது எனக்கும் கேட்கிறது.


பகுத்தறிவாளர்களே ! சற்று தங்களது கருத்தை பகுத்து பாருங்கள் அந்த பகுத்தறிவின் படைப்புகளோடு இலவச இணைப்பாக அச்சமும், குழப்பமும் விளைந்து இருப்பதை.இன்று உலகின் எதிர்புறம் இருப்பவன் எளிதாய் இங்கு வருகிறான், நோய்கள் வரும்முன்னே காப்பதற்கும் வந்த பின்பு ஓட்டுவதற்கும் மருந்துகள் உள்ளன, கொளுத்தும் வெயிலிலும் ஊட்டியில் இருக்கும் உணர்வை தர குளிர் சாதன வசதிகள் இவையெல்லாம் பகுத்தறிவின் ஒரு சில எச்சங்கள் என்பதை மறவாதே!


பகுத்தறிவாளர்களே ! சற்று திரும்பி பாரும் உமது கருத்தை அந்நிய படையெடுப்பும், மக்கள் தொகை பெருக்கமும், இயற்கை போர்வை ஓசோனில் விழுந்த ஓட்டையை தைக்க திணறிக் கொண்டு இருக்கும் இன்றைய‌ நிலையும் அதே பகுத்தறிவின் மிச்சங்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.


அப்படியானால் பகுத்தறிவு பாவம் என்கிறாயா? மனித அறிவு மழுங்கலாய் இருப்பதே நலம் என்கிறாயா?


"பொய்மையும் வாய்மை யுடைத்து புரைதீர்த்த


நன்மை பயக்கும் எனின் "


பொய்யுரைப்பது குற்றம் தான் ஆனால் நன்மை விளையுமென்றால் பொய்யுரைப்பதில் தவறில்லை இது வள்ளுவர் வாக்கு.. மனித சமூகம் அச்சம் குறைந்த நிம்மதி வாழ்வு வாழ மனித மதி மழுங்கலாகவே இருந்து இருந்தால் தவறில்லை.


பகுத்தறிவுக்கு பாடை கட்டுவதா? படிப்படியாய் பல லட்சம் ஆண்டுகள் கூர்மையாக்கிய‌ மூளையை மழுங்கடிப்பதா?


நல்ல கேள்வி ! பரிணாம வளர்ச்சி பெற்ற மனிதனை மீண்டும் கற்காலத்தின் காட்டில் விடமுடியது. ஆனால் எல்லையற்றதாய் நீங்கள் கூறும் பகுத்தறிவுக்கு எல்லை கண்டு விட்டால்!!!!!!!!!பகுத்தறிவுக்கு எல்லையா?


ஆம் ! இனி வரும் பதிவுகளில் நாம் அனைவரும் சேர்ந்து பகுத்தறிவுக்கு எல்லை காண்போம் வாருங்கள்.

தயவுசெய்து தங்களின் கருத்துக்களைப் பின்னூட்டமிடுஙகள்....

எனது அடுத்த பதிவு "பகுத்தறிவு என்னும் சாத்தான்" என்னும் தலைப்பில் விரைவில்...............

விழிமின் !எழுமின் !

வணக்கம் நண்பர்களே ! நான் இணையதளத்திற்கு புதியவன். எனது குறும் சிந்தனைகளையும் கண்டுபிடிபுகளையும் பதிப்பிக்க இந்த வலைப்பதிவை பயன்படுத்த எண்ணி உள்ளேன். தமிழ் கூறும் நல்லுலகு இவ் வலைப்பதிவை வரவேற்பர் என்று நம்புகிறேன். பதிவுகள் இன்னும் ஓரிரு நாட்களில் பதியும் ......

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருத்தால் கீழே ஓட்டளித்து செல்லுங்கள்...