உலக மொழிகளின் தரவரிசை!சில நாட்களுக்கு முன் இந்திய மொழிகளின் தரவரிசையை பார்த்தோம். அது பேச தெரிந்தவர்கள் அடிப்படையிலானது. இப்போது நாம் பார்க்க இருப்பது உலக மொழிகளின் தரவரிசை. இந்த தரவரிசை அந்தந்த மொழிகளை முதன்மை மொழியாக பேசுபவரின் எண்ணிக்கை அடிப்படையிலானது.


நன்றி:Times of India
**********************************************************************************
தினம் தினம் புதிய தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை, பயனுள்ள பல தகவல்களை பெற இங்கும் நுழையலாம்.
**********************************************************************************
அமரர் கல்கியின் "பார்த்திபன் கனவு" படிக்கவும் தரவிறக்கவும் இங்கே சொடுக்கவும்.
**********************************************************************************
எவன் பெருமையடித்தானோ அவனை இறைவன் தாழ்வடையச் செய்வான்,
எவன் பணிவாக இருக்கிறானோ அவனை இறைவன் உயர்த்துவான்.

                 - முஹம்மது நபி 

தொடுவானமும்! அவளும்!காலுக்கு அடியில் விழுந்திருந்த காலத்தில்
மிதிக்க தோன்றியது
தலைக்கு மேல் பறந்த பின்பு
எட்டி எட்டி பார்த்தும் எட்டாமல்...
.....காதல்.....
*******************************************************************
தொட்டுவிடும் தூரத்தில்
தொடமுடியாத உயரத்தில்
தொடுவானமும்! அவளும்!
*******************************************************************

  அமரர் சுஜாதாவின் "பேப்பரில் பேர்" சிறுகதை படிக்கவும் 
தரவிறக்கவும் இங்கே சொடுக்கவும்.
*******************************************************************
திரு.கிருஷ்ணா அவர்கள் தனது வலைப்பூவில் பல பயனுள்ள கணிணி குறிப்புகளும், தகவல்களுக்கும் தருகிறார். நிச்சயம் உங்களுக்கும் பயன்படும். அவரது தளத்திற்கு செல்ல‌ இங்கே சொடுக்கி நுழையவும்.
*******************************************************************
சிந்திக்க:
  மனமாரக் காதலிக்கும் பெண்களுக்கு முன்னே எந்த ஒரு 
ஆணும் குழந்தையாகி விடுவான்!
                       –தாகூர் 

அடுத்த திருவிழாவுல வாங்கிக்கிறேன்!!!!!   நேற்று வெண்ணிலா கபடிகுழு திரைப்படம் பார்த்தேன். விவரிக்க வார்த்தைகளே இல்லை ஒவ்வொரு frame உம் அருமை. இயக்குனர் அருமையாக செதுக்கியிருக்கிறார். இந்த படத்தை பாராட்டி எழுத வேண்டுமென்றால் ஒவ்வொரு சீனையும் எழுத வேண்டும். எல்லா படங்களைப் போலும் இதிலும் சிற்சில குறைகள் இருந்தாலும் இந்த திரைப்படம் அவைகளை பின்னுக்கு தள்ளிவிட்டு இதயத்தில் நீங்காத இடம் பிடித்து விட்டது. சுசீந்திரன் சார் கலக்கீட்டீங்க. இதே போல் நிறைய எதிர்பார்க்கிறேன் உங்களிடம் இருந்து.

   தயவுசெய்து அனைவரும் இந்த திரைப்படத்தை பாருங்கள். கிராமத்தில் கபடியோடும் காதலோடும் வளர்ந்தவர்களுக்கு இந்த படம் நிச்சயம் பிடிக்கும். எனக்கு பிடித்ததை போல...

**********************************************************************************
   கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் கருவாச்சி காவியம் தரவிறக்க இங்கே சொடுக்கவும்.
**********************************************************************************
   கணிணி மென்பொருள் மற்றும் பல பயனுள்ள தகவல்கள் பெற இந்த தளத்திற்கும் செல்லுங்கள்.
**********************************************************************************
   எப்பொழுது நம்மை நாம் நேசிக்க ஆரம்பிக்கிறோமோ அப்பொழுது நம்மை பிறர் நேசிக்க ஆரம்பித்துவிடுவர். நம்மை நாமே தாழ்வாக எண்ணினால் பிறர் நம்மை மிகவும் தாழ்வாக எண்ணுவர்.
**********************************************************************************

இந்திய மொழிகளின் தரவரிசை!!!!!மொழிகளை பல வகையிலும் வரிசைப்படுத்தலாம். அதாவது இனிமை, எளிமை, எழுத்துகளின் எண்ணிக்கை, பேசுவோரின் எண்ணிக்கை,அறிந்தவர்கள் எண்ணிக்கை இப்படி பல வகைகளில்.

இங்கு நாம் பார்க்கப் போகும் தரப்பட்டியல் மொழிகளை அறிந்தவர்களின் எண்ணிக்கை அடிப்படையிலானது.

இந்தியாவில் அதிக நபர்கள் பேச அறிந்த மொழி இந்தி, பேசுபவர்களின் எண்ணிக்கை 55 கோடியே 14 லட்சம். இரண்டாம் இடத்தில் இருப்பது ஆங்கிலம், 12 கோடியே 53 லட்சம். மற்ற இடங்களை அட்டவணையில் வகைப்படுத்தியுள்ளேன். எண்ணிக்கைக‌ள் கோடியில்.நன்றி: Times of India நாளிதழ்

**********************************************************************************
சார்லி சாப்ளின் ன் வாழ்கை வரலாறு. தரவிறக்க இங்கே சொடுக்கவும்.
***********************************************************************************
புதுவை.com ல் பல பயனுள்ள கணிணி தகவல்களும், மென்பொருட்களும் கிடைக்கினறன. ஒரு முறை உள்ள போய் தான் பாருங்களேன்.
***********************************************************************************
சிந்திக்க:
உங்களுக்கு நேரும் துன்பங்களிலும் ஒரு நன்மை உண்டு. அது என்னவென்றால் உங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களின் அன்பின் அளவையும்,ஆதரவையும். எவர் உண்மையான நண்பன் என்பதையும் உணர்ந்து கொள்ள கிடைக்கும் தருணம் அது.

                     -சொன்னது யார்?

அணுகுண்டின் ஆதி!!!

நேற்று எனது பள்ளி கால நண்பன்(ர்) மின்னஞ்சல் ஒன்று அனுப்பியிருந்தான். மின்னஞ்சல் முழுதும் எனக்கு பிடித்த ஒருவர், என்றும் நான் ரசிக்கும் ஒருவரின் புகைப்படங்கள். (உடனே நீங்க யாரை நினைக்கிறீங்கனு எனக்கு தெரியும். நான் அவன் இல்ல..).

நான் வியந்த,வியக்கும் மனிதர்களில் முக்கியமானவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். அந்த மின்னஞ்சல் முழுதும் அவரது அரிய புகைப்படங்கள். அதில் ஒரு கடிதமும் இருந்தது. அது அப்போதைய (1939) அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட் அவர்கள் நம்ம தலைவர் ஐன்ஸ்டீனுக்கு எழுதி இருந்தது.

படித்து பாருங்கள். அணுகுண்டின் ஆதி இந்த கடிதத்தில்...


மேலும் விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும்
*********************************************************************************
பல சுவாரஸ்யமான வலைதளங்களை திரு.சைபர்சிம்மன் அவர்கள் தனது வலைப்பக்கத்தில் அறிமுகப்படுத்தி வருகிறார். அவரது பக்கத்திற்கு செல்ல இங்கே சொடுக்கவும்.
*********************************************************************************
மதனின் "வந்தார்கள் வென்றார்கள்" தரவிறக்க இங்கே சொடுக்கவும்.
********************************************************************************
சிந்திக்க:

கற்பனைசெய்தல் மிக முக்கியமானது அறிவைக்காட்டிலும்.
‍ --ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

தற்கொலைக்கு ஓர் எளிய வழி!!!!ப‌ட‌த்தின் மேலே இர‌ண்டு முறை சொடுக்கி பெரிதாக‌ பார்க்க‌லாம்.

************************************************************************
3G,4G என்றால் என்ன?---- அடுத்து வரும் பதிவுகளில்...
************************************************************************
அம‌ர‌ர் சுஜாதாவின் "க‌ட‌வுள் இருக்கிறாரா?" த‌ர‌விற‌க்க‌ இங்கே சொடுக்க‌வும்.
************************************************************************
சிந்திக்க‌:
எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர்கள் தாம் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள்.
- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
***********************************************************************

கசந்தினிக்கும் காபி!சர்க்கரை சரியாய் கலக்காத காபி போல்
மேலே கசக்கிறது ஆனால்
இதயத்தின் அடியில் இனிக்கிறது
அவளின் நினைவு.

உயரம் காட்டாது உன் பெருமையை!

எனது தொழில் சார்ந்த விசயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
ஒவ்வொருவரும் முதன் முதலில் செல்போன் டவரை பார்க்கும் போது நிச்சயம் ஆச்சர்யபடுவார்கள். நிறைய பொருட்செலவில் அமைக்கப்படும் ஒரு செல்போன் டவர் வாயிலாக ஒரே நேரத்தில் எத்தனை பேர் பேச முடியும் என்று நினைக்கிறீர்கள்? விடை பதிவின் இறுதியில்.

*******************************************************************
திரு.சூர்யா கண்ணன் அவர்கள் தனது blog ல் பல்வேறு கணிணி சார்ந்த பயனுள்ள தகவல்களை தமிழில் தருகிறார். நெருப்பு நரி உலவிக்கு அவர் தரும் நீட்சிகள் பற்றிய தகவல் நிச்சயம் அனைவருக்கும் தேவைப்படும். அவரது வலைதளத்திற்கு செல்ல
இங்கே
சொடுக்கவும்.
********************************************************************
அமரர் சுஜாதாவின் "ஏன் எதற்கு எப்படி" டவுன்லோட் செய்ய இங்கே சொடுக்கவும்.
********************************************************************
செல்போன் டவரின் டெக்னிகல் பெயர் Base Transceiver Station சுருக்கமாக BTS என்று கூறுவோம்.பொதுவாக ஒரு BTS வாயிலாக ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 30 பேர் தான் பேச முடியும்.

********************************************************************
சிந்திக்க:
தன்னை ஒரு அறிவாளி என்று நினைப்பவனே ஒரு பெரிய
முட்டாள்! -வால்டேர்

நாள் சுருங்கிய‌து!!!

எனக்கும் தொழில்நுட்ப பதிவு எழுத வேண்டுமென்று ஆசை தான். ஆனால் நான் தான் அதில் சூன்யம் ஆச்சே அதனால் இன்று முதல் இந்த வலைப்பக்கத்தில் எனது தொழில் சார்ந்த செய்திகளையும், அறிவு இயல் சார்ந்த விசயங்களையும் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். சில நேரங்களில் எனது படைப்புகளையும் (அதாங்க கவிதை ங்ற பேருல)பதிவிட உத்தேசித்து உள்ளேன். நலம் விரும்பிக‌ள் வழக்கம் போல் தங்கள் ஒளிவு மறைவற்ற கருத்துகளை பின்னூட்டமிட வேண்டுகிறேன்.

*****************************

சிலியில் நடந்த நிலஅதிர்வு அனைவரும் அறிந்து வருந்தியதே 6.6 ரிக்டர் என பதிவான இந்த அதிர்வு புவியில் ஏற்படுத்தி இருக்கும் மாறுதல்கள் நிறைய என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதில் ஒன்று,இந்த நில அதிர்வின் காரணமாக புவி தனது அச்சில் இருந்து 8 செ.மீ விலகி உள்ளது. அதன் காரணமாக புவியின் சுழற்சி சற்றே அதிகமாகி உள்ளது. விளைவு இனி ஒரு நாளின் நீளம் 1.26 மைக்ரோ வினாடிகள் குறையுமாம்!!!!

ஆக‌வே இனி ஒன்றாம் தேதி 37.8 மைக்ரோ வினாடிக‌ள் முன்ன‌மே வந்து விடும். ஹைய்யா ஜாலி......


*****************************
சிந்திக்க‌:

"எந்த‌ ஒரு காரிய‌த்தையும் எளிமையாக‌ செய். ஆனால் எளிமையான காரியங்க‌ளை அல்ல‌." ‍ ----ஆல்ப‌ர்ட் ஐன்ஸ்டீன்.

அங்காடித்தெருவில் நான்!!!
வைரமுத்துவின் வரிகளைப் போல்
எஸ்.பி.பி ன் குரலைப் போல்
மழலையின் சொல் போல்
Tom & Jerry கார்டூன் போல்
ச‌ன்ன‌லின் வ‌ழி ச‌தறி வ‌ரும் ம‌ழைத்துளி போல்
இன்று பூத்த‌ ம‌ல‌ரின் மேல் ப‌னித்துளி போல்
எப்போதும் ர‌சிக்க‌ தோன்றுகிற‌து
உன் முக‌த்தில் உள்ள‌ ப‌ருவை
அங்காடியை சுற்றி வ‌ரும் நாயைப் போல்
என் மன‌ம் உன் பின்னேயே வாலாட்டி வ‌ருகிறது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருத்தால் கீழே ஓட்டளித்து செல்லுங்கள்...