ஆஸ்கார் The Hurt Locker – விமர்சனம்:





           அப்படி என்ன தான் இந்த படத்துல இருக்குனு ஆஸ்கார் கொடுத்திருக்காங்க பார்க்கலாம்னு தரவிறக்கி பார்த்தேன். படம் REAL FEELING தரணும்னு காமிராவை தோளிலேயே வெச்சு படம் எடுத்த மாதிரி இருந்துச்சு அதனால முதல் 15 நிமிஷம் light ஆ தலைவலி ஆனா போக போக கதையுடன் ஒன்றவும் அதுதான் காரணமாவும் இருக்கு.

           எனக்கும் சின்ன வயசுல எல்லா குழ்ந்தைக்கும் இருக்குற மாதிரி ராணுவ வீரனாகனும்ன்னு ஆசை இருந்துச்சு. அந்த வயசுல மட்டும் இல்ல இப்ப இந்த படம் பார்க்குற வரைக்கும் கூட நான் ராணுவ வாழ்க்கை என்பது சாதனைகள் நிறைந்ததுன்னு தான் நினைச்சிருந்தேன். ஆனால்.....

படம் ஈராக் தலைநகர் பாக்தாத்தில்....

          மகோன்னததின் உச்சியில் இருந்த பாக்தாத் இன்று மக்கிப் போய் இருப்பதை பார்க்கும் போது ஏனோ இயல்பாகவே அமெரிக்காவின் மீதும் தீவிரவாதத்தின் மீதும் கோபம் வருகிறது.

          ஒரு சுவரின் பின் மறைந்து இருக்கும் தீவிரவாதியை (ஈராக் வாசி தீவிரவாதியா இல்ல அமெரிக்காவா.... ) கொல்ல ராணுவ வீரர்களின் அந்த நீண்ட காத்திருப்பு அடிக்கடி காஷ்மீரில் நடக்கும் சம்பவங்களை நினைவுட்டுகிறது. எவ்வளவு பொறுமை.!!!!

          Sergeant William James ஆக நடித்திருக்கும் Jeremy Renner ன் நடிப்பு அருமை.





          இது வரை எத்தனை வெடிகுண்டுகளை செயலிழக்க வைத்து இருக்கிறாய் என்று Colnel கேட்பதற்கு 873 என்று சொல்லும்போது நமக்குள்ளும் ஒரு பெருமை தொற்றிக்கொள்கிறது.

          தன்னுடன் பழகியதற்க்காக ஒரு சிறுவன் கொல்லபடுவதும் அதற்காக வருத்தப்படுவதும் அந்த கொலைக்கு பழி வாங்க துடிப்பதும் என்று தனது இயல்பான நடிப்பால் ரெண்னர் பின்னியிருக்கிறார்.

          Sergeant JT Sanborn ஆக வரும் Anthony Mackie உம சிறப்பாக செய்து இருக்கிறார். சுவரின் பின் மறைந்திருக்கும் தீவிரவாதியை கொல்ல பொறுமையாய் காத்திருப்பதாகட்டும், குண்டுகளை செயழிழக்க செய்யும் போது ரெண்னர் head set ஐ கழற்றி போட்டதற்காக அவரை அறைவதாகட்டும் ஒரு சிறந்த Sergeant நடித்திருக்கிறார்.



          பதிவு பெருசாகுதே ! நிறைய சொல்லனும்னு நினைச்சேன்.

          கடைசியா சொல்றேன்! நல்ல படம். ஆஸ்காருக்கு தகுதியான படம் தான. எல்லோரும் பாருங்க.

*****************************************************************************************

ரசிக்க:

          டாக்டர். அப்துல் கலாம் அவர்கள், நக்கீரனில் எழுதி வந்த தன்னம்பிக்கை தொடர் தரவிறக்க இங்கே சொடுக்கவும்.
*****************************************************************************************

சிந்திக்க:

          கண்ணெதிரே காணும் ஒவ்வொருவரையும் நம்புவது அபாயகரமானது. அதைக் காட்டிலும் ஒருவரையும் நம்பாதிருப்பது மிகவும் அபாயகரமானது.
                                       -அப்ரஹாம் லிங்கன்

3ஜி யும் ! ஸ்வாமிஜியும்!

         க‌ட‌ந்த‌ ப‌திவில் 3ஜி ப‌ற்றி விளக்கிவிட்டு க‌டைசி வ‌ரியில் உல‌க‌ம் அழிய‌ வாய்ப்பு இருக்குனு சொன்னாலும் சொன்னேன் சில‌‌ மெயில், நிறைய செல்பேசி அழைப்புக‌ள். எப்ப‌டி ? எப்ப‌டினு?.....


எப்ப‌டிங்குற‌துக்கு முன்னாடி......




         உலகின் முதல் 3ஜி நெட்வொர்க் 2001 ல் அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுகத்தில் அதன் தகவல் பரிமாற்ற வேகம் 348 kbps. இன்றைய தேதியில் 3ஜி தகவல் பரிமாற்ற உச்சகட்ட‌ வேகம் 21Mbps. இன்னும் 2 வருடங்களில் 50 Mbps லிருந்து 100 Mbps வரை செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

         இவ்வருட இறுதிவாக்கில் பாகிஸ்தான் மற்றூம் பங்களாதேசும் 3ஜி சேவையை அறிமுகப்படுத்தவிருக்கின்றன.

        நான் முதன்முதலில் தொலைதொடர்பு துறையில் நுழைந்தபொழுது க‌ண்ணாடி நுண்ணிழை (Optical Fiber) மற்றும் 2 Mbps Stream (PCM) என்று சொல்வோம். அதைபார்த்து வாய்பிளந்த்துண்டு. இன்று என்னடாவென்றால் வீட்டுக்கொரு Fiber (Fiber To Home - FTH)அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது. உங்களுக்கு தெரியுமா! ஒரு க‌ண்ணாடி நுண்ணிழை (Optical Fiber)ன் கொள்ளளவு இன்று வரை உறுதி செய்யப்படவில்லை. இங்கு நான் ஒரு க‌ண்ணாடி நுண்ணிழை (Optical Fiber)ல் 400 Gbps வரை செலுத்தி வருகிறேன்.



        சரி க‌ண்ணாடி நுண்ணிழை (Optical Fiber)பற்றி பிரிதொரு நாள் பார்ப்போம். இப்போது 3ஜி ஆல் உலகம் அழிய எவ்வாறு வாய்ப்புள்ளது என்று பார்ப்போம்....

        இந்த தளத்தை ஒரு பார்வை பார்த்து விடுங்கள். சுட்டி

        எங்களுக்கு தமிழ்ல சொன்னாதான் புரியும் என்பவர்கள். பிரபல பதிவுலக (சாமியார்னு சொல்லலாமா, இல்லை ஆன்மீகவாதினு சொல்லலாமா, இல்லை அகோரினு சொல்லலாமா) சரி ஏதோ ஒண்ணு. ஆனா பிரபல பதிவர். திரு.ஸ்வாமி ஓம்கார் அவர்களின் ரொம்ப பழைய ஒரு பதிவு இத படிங்க 4 பாராவை கவனிக்கவும்.

        இந்த மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி( Mobile Number Portabilty- MNP ), ஐபி டிவி ( IP TV ), மற்றும் ஜிகா போர்ட்( GE Port ) வேலைகள் நேரத்தை இறுக்குவதால் மேலதிக தகவ்லகளை இப்பதிவில் பதிவிட இயலவில்லை.Gap பார்த்து இத‌ type ப‌ண்ற‌துக்கே 3 நாள் ஆகிடுச்சு. அலைக்கற்றை ( Spectrum ) பற்றி ஒரு பதிவு ஒன்று தயார் செய்து வருகிறேன் அதில் செல்போன் கதிரியகத்தின் தீமை விளக்கப்படும். அந்த பதிவு விரைவில் வரும்.

நன்றிகள்:

        தன‌து பதிவின் சுட்டியை பயன்படுத்த அனும‌தியும் ந‌ல்ல‌ rhythemic த‌லைப்பையும் த‌ந்த‌ருளிய‌ ஸ்வாமிஜிக்கு.

ரசிக்க:

        த‌மிழின் முத‌ல் நாவ‌ல், த‌மிழின் முத‌ல் நாவ‌லா இது என்று ஆச்ச‌ர்ய‌ப‌ட‌வைக்கும் ப‌டைப்பு. ஆம்‌ மாயூர‌ம் வேத‌நாய‌க‌ம் பிள்ளை அவ‌ர்களின் பிர‌தாப‌ முத‌லியார் ச‌ரித்திர‌ம்.

சிந்திக்க:

        வெற்றி என்பது ஒவ்வொரு முறையும் முதல் இடத்தைப் பெறுவது என்று பொருள் அன்று. வெற்றி பெற்றாய் என்றால் உன் செயல்பாடு சென்ற முறையை விட இம்முறை சிறப்பாக அமைந்துள்ளது என்று பொருள்.
                                                                -பான்னி ப்ளேயர்

3ஜி ! சில சந்தேகங்களும் விளக்கங்களும்!




     சமீப காலமாக என்னை அழைக்கும் பெரும்பாலன நண்பர்கள் கேட்பது 3G பற்றி தான். அதிலும் கடந்த ஒரு வாரம் அவர்கள் வினவுவது 3G ஏலத்தை பற்றை. அவர்களின் சந்தேகங்களும் அதற்கான விளக்கங்களும்.

3G னா என்ன? இப்ப புழக்கத்துல் இருக்குற 2G க்கும் அதுக்கும் என்ன வித்தியாசம்?

     3G என்பது மூன்றாம் தலைமுறை கம்பியில்லா தொலைதொடர்பு நுட்பம். இது புழக்கதில் இருக்கும் 2G ன் குறிப்பிடத்தகுந்த பரிணாம வளர்ச்சி. 2G ல் நம்மால் தகவல், குறுங்செய்தி, குரல் இவைகளை மட்டுமே பரிமாறிக்கொள்ள முடியும். ஆனால் 3G ல் நம்மால் இவைகளுடன் கூடுதலாக வீடியோக்களையும், மல்டீமீடியா தகவல்களையும், தரம் உயர்த்தப்பட்ட குரல் பரிமாற்றத்தையும் பெற முடியும்.

உலகத்தில் எத்தனை நாடுகளில் இந்த 3G உள்ளது?

     சுமார் 132 நாடுகளில் இந்த 3G தொழில்நுட்பம் புழக்கத்தில் உள்ளது.

எவ்வளவு பேர் 3G பயன்படுத்துகிறார்கள்?

     சுமார் 47 லட்சம். இதில் 13% 2G ல் இருந்து 3G க்கு மாறிய‌வ‌ர்க‌ள். ம‌ற்ற‌வ‌ர்க‌ள் நேர‌டியாக‌ உள் நுழைந்த்த‌வ‌ர்க‌ள்.

ஆசியாவில் 3G ன் வள‌ர்ச்சி எப்ப‌டி?

     ஆய்வொன்று கூறுகிற‌து "2013 ல் ஆசியாவில் சுமார் 5 கோடியே 70 ல‌ட்ச‌ம் 3G உப‌யோகிப்பாள‌ர்க‌ள் இருப்ப‌ர். அதில் இந்தியா 6 % கொண்டிருக்கும்."

3G தொழில்நுட்ப‌த்தின் முன்னோடிக‌ள் யார்?

     ஜ‌ப்பான் ம‌ற்றும் தென்கொரியா 3G ன் தாதாக்க‌ள்.மேலும் இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி, மற்றும் அமெரிக்காவும் குறிப்பிடத்தகுந்த பங்கு வகிக்கின்றன.

இந்தியாவில் 3G உரிமம் எத்தனை பேருக்கு வழங்கப்படும்?

     இந்தியா தொலைதொட‌ர்பு அடிப்ப‌ட‌யில் 22 வ‌ட்ட‌ங்க‌ளாக‌ ப‌குக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து. அதில் ஒவ்வொரு வ‌ட்ட‌த்திற்கும் 3 உரிம‌ங்க‌ள் வ‌ழ‌ங்க‌ப்ப‌டும். அந்த‌ 22 ல் 5 க்கு 4 உரிம‌ங்க‌ள் வ‌ழ‌ங்க‌ப்ப‌டும். ஆக‌ மொத்த‌ம் 71 உரிம‌ங்க‌ள். BSNL ம‌ற்றும் MTNL நிறுவ‌ன‌ங்க‌ள் 3G சேவையை த‌ற்பொழுதே அளித்து வ‌ருவ‌து குறிப்பிட‌த்த‌க்க‌து. இந்தியாவில் இவ்விரு பொதுத்துறை நிறுவ‌ன‌ங்க‌ளே 3G ன் முன்னோடிக‌ள். 3G முதன்முதில் BSNL இல் அதுவும் தமிழ்நாட்டில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். நினைவில்லாதோர்க்காக அதன் அழைப்பிதழை கீழே இணைத்த்ருக்கிறேன். படத்தின் மீது சொடுக்கினால் பெரிதாக தெரியும்.



ஏன் 3G ஏல‌ம் தாமாத‌மான‌து?

     ராணுவ‌த்திற்கு தேவையான‌ 3G அலைவ‌ரிசையை பாதுகாக்கும் வழிமுறை பற்றி பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்வ‌தில் தாம‌த‌மான‌தால் த‌னியார் நிறுவ‌ன‌ங்க‌ளுக்கு அலைவ‌ரிசை ஒதுக்குவ‌தில் சிக்க‌ல் ஏற்ப‌ட்ட‌து.

3G ஏல‌த்திற்கு பிற‌கு போட்டி அதிகமாகுமா?

     நிச்ச‌யமாக‌ இருக்காது. ஏனென்றால் இப்போது ச‌ந்தையில் உள்ள‌ நிறுவ‌ன‌ங்க‌ள் தான் இந்த‌ ஏல‌த்தில் ப‌ங்கெடுக்க முடியும். புதிய‌வ‌ர்க‌ள் ப‌ங்கெடுக்க‌ முடியாது. என‌வே போட்டி வ‌ழ‌க்க‌ம் போல‌தான் இருக்கு. சிறிது மாற்ற‌ம் இருக்க‌லாம். குறிப்பிடும் ப‌டியாக‌ ஏதும் இருக்காது.

3G உரிம‌ங்கள் எவ்வ‌ள‌வு கால‌த்திற்கு செல்லுப‌டியாகும்?

     20 வ‌ருட‌ங்க‌ள் அதாவ‌து 2030 வ‌ரை.

3G அலைக்க‌ற்றை ஒதுக்கீட்டின் துவக்க ஏல‌ விலை என்ன‌?

     துவக்க விலை 3500 கோடி. ஆனால் சுமார் 65000 கோடி வ‌ரை செல்லும் என‌ அர‌சு எதிர்பார்க்கிற‌து.

     போதுமா! இல்லை இன்னும் ஏதாச்சும் ச‌ந்தேக‌ம் இருந்தா பின்னூட்ட‌மிடுங்க‌. இது ந‌ம்ம‌ ஏரியா. So டீடெய்லா தெளிவுப‌டுத்திடுறேன்.....

     ஒரு ந‌ண்ப‌ர் கேட்டார். 3G ஆல் உல‌க‌ம் அழிய வாய்புள்ளதா என்று? இத‌ற்கு என‌து ப‌தில்... ஆம்!

********************************************************************************************
ரசிக்க:
     குமாரிகிருஷ்ணா அவர்கள் தனது தளத்தில் பல பயனுள்ள தகவல்களையும், மின்னூல்களையும் தருகிறார். சிறுவர் நீதிக்கதைகளின் மின்னூல் களஞ்சியமும் அதிலுண்டு அதற்கான இணைப்பு இதோ.

********************************************************************************************

சிந்திக்க:
     ஒரு உண்மையான நண்பன் வாழ்வின் நல்மருந்து.- பைபிள்.

********************************************************************************************



யோகமும்! காதலும்!




டாவின்சியின் ஓவியம் போல்
புதிர்களை புதைத்தவை உன் புன்னகை
உன் புன்னகையின் அர்த்தம் காண முயன்று
நான் தோற்று தூங்க போன இரவுகளில்
சேவல் கூவி முடித்திருந்தது
இடகலை பிங்கலை அல்லாமல்
சுழுமுனையில் சுவாசம் நின்றால்
சித்தம் சித்திக்கும் அது யோகம்
சரி என்றும் கூறாமல்
முடியாதென்றும் மறுக்காமல்
நடுநிலை வகிப்பது
சுவாசம் இருந்தும் மரணத்தை உணர்விக்கும்
இது காதல்.
இறைவா! எனக்கு ஏதேனும் வரம் தர எண்ணினால்
அவள் புன்னகையை அர்த்திக்கும் அகராதி தா!
****************************************************************************************************************

ரசிக்க:
      சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஆனந்த விகடனில் எழுதி வந்த ஆண்டவன் கட்டளை தரவிறக்க இங்கே சொடுக்கவும்

****************************************************************************************************************
சிந்திக்க‌:
      தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயங்காதே. தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. - லெனின்

காயகற்பமும்! Kung-Fu Panda வும்!!!




      கடந்த 14 தினங்களாக கடுக்காய் காயகற்பத்தினை முயற்சித்ததில் எனக்கு தோன்றுவது இதுதான். அனைத்து காயகற்பங்களின் முடிவும் குங் பூ பாண்டாவில் வரும் அந்த ஓலைச்சுருளில் அடங்கிய ரகசியம் தானென்று. இடையில் நேற்று ஏற்பட்ட உடல்நலக்குறைவால் காயகற்ப முயற்சி தடைப்பட்டுள்ளது. 14 நாள் அனுபவமே அற்புதம் (போதும்டா சாமி!!!) இருந்தாலும் விட மாட்டோம்ல.. எது எப்படியாயினும் ஒரு மண்டல காயகற்பத்தில் இன்னும் 28 நாட்கள் பாக்கி. முடிந்ததும் முழு விபரமும் இந்த பக்கத்திலேயே.....

*****************************************************************************
ரசிக்க:
         தபூ சங்கரின் "வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்!" தரவிறக்க இங்கே சொடுக்கவும்.
******************************************************************************
சிந்திக்க:
         செய்யத் தெரிந்தவன் சாதிக்கிறான். செய்யத் தெரியாதவன் போதிக்கிறான்.

                                - கர்னல் கீல்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருத்தால் கீழே ஓட்டளித்து செல்லுங்கள்...