எங்கடா அவன்.. கையில கிடச்சான்னா அவ்ளோதான்...


நான் என்னோட வேலையில ரொம்ப பிஸி (?) அதனால சமீப காலமா தமிழ் படங்கள் பார்க்க முடியறது இல்ல. ரெண்டு நாளைக்கு முன்னாடி பெங்களூர் ல இருந்து ஒரு நண்பன் போன் பண்ணினான் "டேய் மச்சான்! ஒரு படம் வந்துருக்கு டா. செம சூப்பர் மச்சி. ஹாலிவுட் டச் ல இருக்கு. உனக்கு வேற அமரர் கல்கி னா பிடிக்குமே அவரோட புதினங்கள் பார்த்திபன் கனவு, பொன்னியின் செல்வன் பேஸ் பண்ணின படம் தவறாம பாரு " அப்படினு சொன்னான். (நான் அவ‌னுக்கு எந்த‌ கெடுத‌லுமே ப‌ண்ணின‌து இல்ல‌யே.. :-( )

சரி நண்பன் சொல்றானேனு நானும் எனது இடையறாத பணிகளுக்கு நடுவே டாரண்ட் உதவியால தரவிறக்கம் செய்து பார்த்தேன்.

மண்ணாங்கட்டி... கல்கியோட புதினங்களுக்கும் அந்த படத்துக்கும் ஒரு வரி கூட சம்பந்தத்தைக் காணோம். என்ன ஆச்சு செல்வ ராகவனுக்கு. நல்லா தான போய்கிட்டு இருந்துச்சு.


டைரகடர் நல்லா குழப்பி போயிருகார்னு தெளிவா தெரியுது. நல்ல கதையில இலங்கை பிரச்சனையை நுழைக்க முயற்சித்த‌து முழு படத்தையும் நசமாக்கிருச்சு. 2 நிமிடம் வேக வைக்க வேண்டிய நூடுல்ஸ 20 நிமிசம் வேக வைச்சா என்ன ஆகுமோ அப்படி ஆகியிருக்கு கதை.

அதுக்காக படம் முழுசும் வேஸ்ட்னு சொல்ல முடியாது. ஆங்காங்கே சில விசயங்கள் ரசிக்கும் படியா இருக்கு. படத்தில் ரெண்டு ஆறுதல் ஒண்ணு பார்த்திபன். தனக்கு கொடுத்த காசுக்கு மேலேயே மெனக்கெட்டு இருக்காரு ஆனா என்ன பண்றது விழலில் இறைத்த நீர். இன்னொரு ஆறுதல் ரீமா சென். ரீமா உங்களுக்கு நல்லா நடிக்கவும் வருது. மத்தபடி கேரகடர் செலக்ட் பண்றதிலேயே ராகவன் சறுக்கிட்டார்.

அந்த ராணுவ மேஜர் (அதாங்க கற்றது தமிழ் ல வர ஸ்கூல் வாத்தி) பார்க்க சரத் பொன்சேகா மாதிரியே இருக்காருங்கறதுக்காக அவரயா செலக்ட் பண்றது? சுத்தமா ஒட்டவே இல்ல.

மொத்த‌த்துல‌ க‌தையே ம‌னசுல‌ ஒட்ட‌ல‌... ஒரு ந‌ம்பிக்கைகுரிய‌ விச‌ய‌ம் என்ன‌னா ரெண்டாம் பாக‌ம் எடுக்க‌ போறாங்க‌ளாம்... ஹ்ம்ம்.. அதுல‌யாவ‌து த‌வ‌றுக‌ளை ச‌ரி செய்வீங்க‌ளா செல்வா?.........

இந்த பதிவோட தலைப்பு, என்னய அந்த படத்த பார்க்க சொன்ன அந்த பிரியமான நண்பன பற்றி மற்றவர்களிடம் விசாரிக்கும் வாசகம்..

0 comments:

Post a Comment

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருத்தால் கீழே ஓட்டளித்து செல்லுங்கள்...