மூன்றடி திருக்குறள்வானத்தையும் தாண்டி
எனக்கான விடியலைத் தேடி
கனவுகள் பெரிது ஆயினும்
அடைந்திடும் உறுதியும் பெரிது
என் லட்சியத்தின் குறுக்கே வரும்
இதமான இம்சை நீ
உன் இச்சை கடந்தால் மட்டுமே
லட்சியம் கைக்கெட்டும் நிலையில் நான்
சூரியனை பிடிக்க பறந்த்திடும் பறவை நீ
வானத்தின் எல்லை தேடும் முட்டாள் நான்.
மூன்றடி திருக்குறள் நாம்
சாத்தியமில்லா பொருத்தமுள்ள‌ ஜோடி நாம்.

1 comments:

kanagadurga said...

எங்கே சென்று விடுவாய் என்னைத் தவிர்த்துவிட்டு?என் உதட்டின் கடைசிப் புன்னகை
என் கண்களின் மிக நீண்ட கண்ணீர்
இரண்டுமே நீ கொடுத்தவை!

என்னை விட்டு விலகுவதாக நினைத்து
ஓடிக் கொண்டேயிருக்கிறாய்...

வானமாய் என் அன்பை
விரித்து வைத்திருக்கிறேன்...

எங்கே சென்று விடுவாய்
என்னைத் தவிர்த்துவிட்டு?...

Post a Comment

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருத்தால் கீழே ஓட்டளித்து செல்லுங்கள்...