3ஜி ! சில சந்தேகங்களும் விளக்கங்களும்!
     சமீப காலமாக என்னை அழைக்கும் பெரும்பாலன நண்பர்கள் கேட்பது 3G பற்றி தான். அதிலும் கடந்த ஒரு வாரம் அவர்கள் வினவுவது 3G ஏலத்தை பற்றை. அவர்களின் சந்தேகங்களும் அதற்கான விளக்கங்களும்.

3G னா என்ன? இப்ப புழக்கத்துல் இருக்குற 2G க்கும் அதுக்கும் என்ன வித்தியாசம்?

     3G என்பது மூன்றாம் தலைமுறை கம்பியில்லா தொலைதொடர்பு நுட்பம். இது புழக்கதில் இருக்கும் 2G ன் குறிப்பிடத்தகுந்த பரிணாம வளர்ச்சி. 2G ல் நம்மால் தகவல், குறுங்செய்தி, குரல் இவைகளை மட்டுமே பரிமாறிக்கொள்ள முடியும். ஆனால் 3G ல் நம்மால் இவைகளுடன் கூடுதலாக வீடியோக்களையும், மல்டீமீடியா தகவல்களையும், தரம் உயர்த்தப்பட்ட குரல் பரிமாற்றத்தையும் பெற முடியும்.

உலகத்தில் எத்தனை நாடுகளில் இந்த 3G உள்ளது?

     சுமார் 132 நாடுகளில் இந்த 3G தொழில்நுட்பம் புழக்கத்தில் உள்ளது.

எவ்வளவு பேர் 3G பயன்படுத்துகிறார்கள்?

     சுமார் 47 லட்சம். இதில் 13% 2G ல் இருந்து 3G க்கு மாறிய‌வ‌ர்க‌ள். ம‌ற்ற‌வ‌ர்க‌ள் நேர‌டியாக‌ உள் நுழைந்த்த‌வ‌ர்க‌ள்.

ஆசியாவில் 3G ன் வள‌ர்ச்சி எப்ப‌டி?

     ஆய்வொன்று கூறுகிற‌து "2013 ல் ஆசியாவில் சுமார் 5 கோடியே 70 ல‌ட்ச‌ம் 3G உப‌யோகிப்பாள‌ர்க‌ள் இருப்ப‌ர். அதில் இந்தியா 6 % கொண்டிருக்கும்."

3G தொழில்நுட்ப‌த்தின் முன்னோடிக‌ள் யார்?

     ஜ‌ப்பான் ம‌ற்றும் தென்கொரியா 3G ன் தாதாக்க‌ள்.மேலும் இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி, மற்றும் அமெரிக்காவும் குறிப்பிடத்தகுந்த பங்கு வகிக்கின்றன.

இந்தியாவில் 3G உரிமம் எத்தனை பேருக்கு வழங்கப்படும்?

     இந்தியா தொலைதொட‌ர்பு அடிப்ப‌ட‌யில் 22 வ‌ட்ட‌ங்க‌ளாக‌ ப‌குக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து. அதில் ஒவ்வொரு வ‌ட்ட‌த்திற்கும் 3 உரிம‌ங்க‌ள் வ‌ழ‌ங்க‌ப்ப‌டும். அந்த‌ 22 ல் 5 க்கு 4 உரிம‌ங்க‌ள் வ‌ழ‌ங்க‌ப்ப‌டும். ஆக‌ மொத்த‌ம் 71 உரிம‌ங்க‌ள். BSNL ம‌ற்றும் MTNL நிறுவ‌ன‌ங்க‌ள் 3G சேவையை த‌ற்பொழுதே அளித்து வ‌ருவ‌து குறிப்பிட‌த்த‌க்க‌து. இந்தியாவில் இவ்விரு பொதுத்துறை நிறுவ‌ன‌ங்க‌ளே 3G ன் முன்னோடிக‌ள். 3G முதன்முதில் BSNL இல் அதுவும் தமிழ்நாட்டில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். நினைவில்லாதோர்க்காக அதன் அழைப்பிதழை கீழே இணைத்த்ருக்கிறேன். படத்தின் மீது சொடுக்கினால் பெரிதாக தெரியும்.ஏன் 3G ஏல‌ம் தாமாத‌மான‌து?

     ராணுவ‌த்திற்கு தேவையான‌ 3G அலைவ‌ரிசையை பாதுகாக்கும் வழிமுறை பற்றி பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்வ‌தில் தாம‌த‌மான‌தால் த‌னியார் நிறுவ‌ன‌ங்க‌ளுக்கு அலைவ‌ரிசை ஒதுக்குவ‌தில் சிக்க‌ல் ஏற்ப‌ட்ட‌து.

3G ஏல‌த்திற்கு பிற‌கு போட்டி அதிகமாகுமா?

     நிச்ச‌யமாக‌ இருக்காது. ஏனென்றால் இப்போது ச‌ந்தையில் உள்ள‌ நிறுவ‌ன‌ங்க‌ள் தான் இந்த‌ ஏல‌த்தில் ப‌ங்கெடுக்க முடியும். புதிய‌வ‌ர்க‌ள் ப‌ங்கெடுக்க‌ முடியாது. என‌வே போட்டி வ‌ழ‌க்க‌ம் போல‌தான் இருக்கு. சிறிது மாற்ற‌ம் இருக்க‌லாம். குறிப்பிடும் ப‌டியாக‌ ஏதும் இருக்காது.

3G உரிம‌ங்கள் எவ்வ‌ள‌வு கால‌த்திற்கு செல்லுப‌டியாகும்?

     20 வ‌ருட‌ங்க‌ள் அதாவ‌து 2030 வ‌ரை.

3G அலைக்க‌ற்றை ஒதுக்கீட்டின் துவக்க ஏல‌ விலை என்ன‌?

     துவக்க விலை 3500 கோடி. ஆனால் சுமார் 65000 கோடி வ‌ரை செல்லும் என‌ அர‌சு எதிர்பார்க்கிற‌து.

     போதுமா! இல்லை இன்னும் ஏதாச்சும் ச‌ந்தேக‌ம் இருந்தா பின்னூட்ட‌மிடுங்க‌. இது ந‌ம்ம‌ ஏரியா. So டீடெய்லா தெளிவுப‌டுத்திடுறேன்.....

     ஒரு ந‌ண்ப‌ர் கேட்டார். 3G ஆல் உல‌க‌ம் அழிய வாய்புள்ளதா என்று? இத‌ற்கு என‌து ப‌தில்... ஆம்!

********************************************************************************************
ரசிக்க:
     குமாரிகிருஷ்ணா அவர்கள் தனது தளத்தில் பல பயனுள்ள தகவல்களையும், மின்னூல்களையும் தருகிறார். சிறுவர் நீதிக்கதைகளின் மின்னூல் களஞ்சியமும் அதிலுண்டு அதற்கான இணைப்பு இதோ.

********************************************************************************************

சிந்திக்க:
     ஒரு உண்மையான நண்பன் வாழ்வின் நல்மருந்து.- பைபிள்.

********************************************************************************************4 comments:

கனிமொழி said...

Wow.. Nice explanation...
Thank u...

Anonymous said...

You mentioned because of 3G the world might destroy. May i know whats the reason behind this??

மாயாவி said...

நன்றி! கனிமொழி அவர்களே!

நண்பர் Anonyms க்கு, 3ஜி ஆல் உலகம் அழியுமா என்ற கேள்விக்கு என் பதில் ஆம் தான். பலரும் எவ்வாறு என்று வினா தொடுத்துள்ளனர். உங்களுக்காகவும் அவ்ர்களுக்காகவும் எனது அடுத்த பதிவில் அதை பற்றி எழுதவிருக்கிறேன்.

த.வசந்தகுமார் said...

உங்கள் தகவல் எனக்கு பயனுள்ளதாக இருந்தது.

நன்றி !

Post a Comment

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருத்தால் கீழே ஓட்டளித்து செல்லுங்கள்...