ஆஸ்கார் The Hurt Locker – விமர்சனம்:

           அப்படி என்ன தான் இந்த படத்துல இருக்குனு ஆஸ்கார் கொடுத்திருக்காங்க பார்க்கலாம்னு தரவிறக்கி பார்த்தேன். படம் REAL FEELING தரணும்னு காமிராவை தோளிலேயே வெச்சு படம் எடுத்த மாதிரி இருந்துச்சு அதனால முதல் 15 நிமிஷம் light ஆ தலைவலி ஆனா போக போக கதையுடன் ஒன்றவும் அதுதான் காரணமாவும் இருக்கு.

           எனக்கும் சின்ன வயசுல எல்லா குழ்ந்தைக்கும் இருக்குற மாதிரி ராணுவ வீரனாகனும்ன்னு ஆசை இருந்துச்சு. அந்த வயசுல மட்டும் இல்ல இப்ப இந்த படம் பார்க்குற வரைக்கும் கூட நான் ராணுவ வாழ்க்கை என்பது சாதனைகள் நிறைந்ததுன்னு தான் நினைச்சிருந்தேன். ஆனால்.....

படம் ஈராக் தலைநகர் பாக்தாத்தில்....

          மகோன்னததின் உச்சியில் இருந்த பாக்தாத் இன்று மக்கிப் போய் இருப்பதை பார்க்கும் போது ஏனோ இயல்பாகவே அமெரிக்காவின் மீதும் தீவிரவாதத்தின் மீதும் கோபம் வருகிறது.

          ஒரு சுவரின் பின் மறைந்து இருக்கும் தீவிரவாதியை (ஈராக் வாசி தீவிரவாதியா இல்ல அமெரிக்காவா.... ) கொல்ல ராணுவ வீரர்களின் அந்த நீண்ட காத்திருப்பு அடிக்கடி காஷ்மீரில் நடக்கும் சம்பவங்களை நினைவுட்டுகிறது. எவ்வளவு பொறுமை.!!!!

          Sergeant William James ஆக நடித்திருக்கும் Jeremy Renner ன் நடிப்பு அருமை.

          இது வரை எத்தனை வெடிகுண்டுகளை செயலிழக்க வைத்து இருக்கிறாய் என்று Colnel கேட்பதற்கு 873 என்று சொல்லும்போது நமக்குள்ளும் ஒரு பெருமை தொற்றிக்கொள்கிறது.

          தன்னுடன் பழகியதற்க்காக ஒரு சிறுவன் கொல்லபடுவதும் அதற்காக வருத்தப்படுவதும் அந்த கொலைக்கு பழி வாங்க துடிப்பதும் என்று தனது இயல்பான நடிப்பால் ரெண்னர் பின்னியிருக்கிறார்.

          Sergeant JT Sanborn ஆக வரும் Anthony Mackie உம சிறப்பாக செய்து இருக்கிறார். சுவரின் பின் மறைந்திருக்கும் தீவிரவாதியை கொல்ல பொறுமையாய் காத்திருப்பதாகட்டும், குண்டுகளை செயழிழக்க செய்யும் போது ரெண்னர் head set ஐ கழற்றி போட்டதற்காக அவரை அறைவதாகட்டும் ஒரு சிறந்த Sergeant நடித்திருக்கிறார்.          பதிவு பெருசாகுதே ! நிறைய சொல்லனும்னு நினைச்சேன்.

          கடைசியா சொல்றேன்! நல்ல படம். ஆஸ்காருக்கு தகுதியான படம் தான. எல்லோரும் பாருங்க.

*****************************************************************************************

ரசிக்க:

          டாக்டர். அப்துல் கலாம் அவர்கள், நக்கீரனில் எழுதி வந்த தன்னம்பிக்கை தொடர் தரவிறக்க இங்கே சொடுக்கவும்.
*****************************************************************************************

சிந்திக்க:

          கண்ணெதிரே காணும் ஒவ்வொருவரையும் நம்புவது அபாயகரமானது. அதைக் காட்டிலும் ஒருவரையும் நம்பாதிருப்பது மிகவும் அபாயகரமானது.
                                       -அப்ரஹாம் லிங்கன்

2 comments:

கனிமொழி said...

பதிவு பெருசா ஆனால் என்னங்க, முழுவதுமாய் முடித்து இருக்கலாம்.
nice review.....
;)

மாயாவி said...

அடப்போங்க‌ கனிமொழி! இத டைப் செய்யுறதுக்கே 3 நாள் ஆகிடுச்சு. நேரம் ரொம்ப குறைவா இருக்கு. இந்த படத்த கூட இரவு 2 மணிக்கு பார்த்தேன். என்ன பண்றது நம்ம தொழில் அப்படி.

Post a Comment

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருத்தால் கீழே ஓட்டளித்து செல்லுங்கள்...